பொதுவாக நகரங்களில் மக்களின் நெருக்கம் அதிகரித்துக் காணப்படுவது வழக்கம் தான். இதற்கு, வாழ்வாதாரம், கல்வி, தொழில் போன்ற பல காரணங்கள் இதற்கு சுட்டிக்காட்டலாம். இதில், இந்தியா உட்பட பல நாடுகளில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த நெருக்கடி அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது.
சரி… இந்த நகர நெருக்கடியை எப்படி கணக்கிடுகின்றனர் என்று பார்த்தால், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை பேர் வாழ்கின்றனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில், இந்த நெருக்கடியான நகரங்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
5. Casablanca, Morocco

மொராக்கோ நாட்டின் நகரமான காசாபிளாங்கா, உலகில் 5 வது நெருக்கடி மிகுந்த நகரமாகும். அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 14,200 மக்கள் வாழ்கின்றனர். இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் மொராக்கோ நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை தீர்மானிக்கும் இடமாக காசாபிளாங்கா விளங்குகிறது.
அத்துடன் காசாபிளாங்காவில் பல வணிக மையங்கள் தங்களின் தலைமையிடத்தை அமைத்துக் கொண்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் மட்டும் காசாபிளாங்காவில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர், சுற்றுலாவிற்கு வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
4. Manila, the Philippines

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகராக மணிலா விளங்குகிறது. இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 14,800 பேர் வாழ்கின்றனர். அத்துடன், மொத்தமாக இந்நகரில், 1.78 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள் வாழும் நகரம் மணிலா தான். ஆனால், பிலிப்பைன்ஸில் இது போன்று நெருக்கடி மிகுந்த நகரங்கள் இன்னும் பல உள்ளன.
மணிலாவில் மக்கள் தொகை குறையும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. காரணம், அங்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக 2025 ல், தற்போது இருக்கும் மக்கள் தொகையை விட அந்நகரில் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
3. Medellin, Colombia

மெடலின் நகரில், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 19,700 பேர் வாழ்கின்றனர். இது அதிக மக்கள் வாழும் மூன்றாவது நகரமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வேலை வாய்ப்புகள் அதிகம் வழங்கும் நகரமாகவும், ஆண்டு முழுக்க வசந்த காலமாகவும், அத்துடன் குறைந்த செலவில் வாழும் நகரமாகவும் மெடலின் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொலைகாரர்களின் தலைநகராக இன்றைய உ.பி மாநில நகரம் போல இருந்த இந்த நகரம் இப்போது சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.
2. Mumbai, India

மும்பையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 31,700 பேர் வாழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வேலை வாய்ப்புகள் தான். ஆனால், மூன்று பக்கமும், கடலால் சூழ்ந்துள்ள மும்பையில் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த போதிய இடம் இல்லை. மக்களுக்கு வேறு திசையை நோக்கி நகரவும் வசதியில்லை. மேலும், அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
1. Dhaka, Bangladesh

வங்கதேசத்தின், தலைநகராக டாக்கா விளங்குகிறது. இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 44,500 மக்கள் வாழ்கின்றனர். மொத்தமாக 8.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றங்களால் மக்கள் டாக்காவில் வந்து குவிவதாக கூறப்படுகிறது. ஆனால், டாக்காவில் போக்குவரத்து மற்றும் கழிவு நீர் மேலாண்மை முறையாக இல்லாதது, மக்களை வெகுவாக பாதித்து வருகிறது.
உலகில் அதிக மக்கள் நெருக்கடி கொண்ட 10 நகரங்களின் பட்டியல்
எண் | நகரம் | நாடு | சதுர கிலோமீட்டருக்கு எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள்? |
1 | மணிலா | பிலிப்பைன்ஸ் | 41,515 |
2 | பட்ரோஸ் | பிலிப்பைன்ஸ் | 36,447 |
3 | மண்டலுயாங் | பிலிப்பைன்ஸ் | 34,925 |
4 | பாக்தாத் | ஈராக் | 32,874 |
5 | மும்பை | இந்தியா | 32,303 |
6 | டாக்கா | பங்களாதேஷ் | 29,069 |
7 | கலூக்கன் | பிலிப்பைன்ஸ் | 27,989 |
8 | மன்ஹாட்டன் | அமெரிக்கா | 27,544 |
9 | போர்ட்-ஓ-பிரின்ஸ் | ஹெய்தி | 27,395 |
10 | பெனே பெராக் | இஸ்ரேல் | 27,338 |
கொரோனா வைரஸ் மும்பை மற்றும் டாக்காவில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.