அமெரிக்காவின் வடகோடி முனையில் உள்ளது அலாஸ்கா நகரம். அங்குள்ள Utqiaġvik பகுதியில் இன்றிலிருந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது என அந்நாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். ஆர்டிக் துருவப் பகுதியில் இருக்கும் இந்த நகரத்தில் வரும் ஜனவரி மாதமே இனி சூரியன் உதிக்கும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலும் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தே இருக்கும்.
எதனால் ?
ஆர்டிக் வளையத்தின் மேற்பகுதியில் சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பனிப்பிரதேசம் அமைந்துள்ளது. பூமியின் சாய்வு காரணமாக நவம்பர் மாதம் முதல் இப்பகுதியில் சூரிய ஒளியினைப் பார்க்க முடியாது. ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் வரை இந்த நிலை தான்.

சூரியன் மிக தொலைவினில் இருப்பதாலும், வடதுருவப் பகுதி வெளிப்புறமாக சாய்ந்து இருப்பதாலும் இப்பகுதியில் 6 டிகிரி கோணத்தில் சூரியக் கதிர்கள் வந்து விழும். ஆனாலும் அடர்பனியின் காரணமாக மிக மெல்லிய வெளிச்சத்தினை மட்டுமே உணர முடியும். இதனை ஆராய்ச்சியாளர்கள் civil twilight என்கின்றனர்.
டிசம்பர் வரை தான் இந்த மெல்லிய வெளிச்சமும் அதன் பின்னர் சூரியன் முழுவதுமாக அஸ்தமித்துவிடும். அடுத்து வரும் ஜனவரி மாதம் 23 ஆம் தேதியில் தான் இனி சூரியனைப் பார்க்க இயலும். இதனால் அப்பகுதியில் கடுமையான குளிர்காலம் இம்மாதங்களில் நிலவும்.

80 நாள் பகல் !!
சாதாரண மனிதர்களால் இந்தக் குளிரை தாங்க இயலாது. இங்கு வசிக்கும் இப்பகுதியின் பூர்வ குடிகளான Iñupiaq மக்கள் சுமார் 4,400 பேர் இப்பிராந்தியத்தில் வசிக்கின்றனர். ஜனவரி வரை சூரியன் உதிக்காத இந்த நகரத்தில் மே மாதம் முதல் 80 நாட்களுக்கு சூரியன் மறையாது. இதற்கும் காரணம் பூமி மற்றும் சூரியனின் தொலைவும், பூமியின் சாய்வும் தான்.