ஆணாதிக்க மனோபாவத்தின் மேல் சவுக்கை சுழற்றிய ‘எவடா உன்னைப் பெத்தா?’ பாடல்

Date:

கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத ஸ்பூஃப் வகை சினிமாவை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ‘தமிழ்ப்படம்’ குழுவினர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் படம் திரையரங்கில் வெளியானபோது எதிர்பார்த்த அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் வரவேற்புப் பெறவில்லை. காரணம் அந்த வகை சினிமா மக்களுக்கு புதியது அப்போது அது பெரிதாக புரியவில்லை என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமா இதுவரை காதலையும் பெண்களையும் எவ்வளவு மட்டகரமாக காட்டியிருக்கிறது என்பதை ‘தமிழ்ப்படம் 2’-ன் காதல் காட்சிகள் பிரித்து மேய்ந்துவிட்டது.

ஆனால், ஸ்பூஃப் வகையறா குறித்த புரிதலை ஏற்படுத்தியதுடன், அது தொடர்பான தேடலையும் உண்டாக்கினர். அதன் விளைவாக, இந்த எட்டு ஆண்டுகளில் ‘தமிழ்ப்படம் மாதிரி இன்னொரு படம் வராதா?’ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தினர். மக்களின் ரசனையை மேம்படுத்துவதற்கு சினிமா உறுதுணைபுரிய வேண்டுமே தவிர, மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே சாக்காக வைத்து புதிதாக யோகாசிக்காமல் ஒரே மாதிரியான திரைப்படங்களையே எடுத்துக் கொண்டிருத்தல் சலிப்பையே உண்டாக்கும் என்று நிரூபித்திருக்கிறார்கள்

சில தமிழ் திரைப்படங்கள் இதுவரை காதலையும் பெண்களையும் எவ்வளவு மட்டகரமாக காட்டியிருக்கிறது என்பதை ‘தமிழ்ப்படம் 2’-ன் காதல் காட்சிகள் பிரித்து மேய்ந்துவிட்டது. அதுவும் அந்த ‘எவடா உன்ன பெத்தா’ பாடலும் காட்சி வடிவமைப்பும் பகடியின் உச்சம். பகடியின் வடிவில் ஆழ்ந்த பெண்ணிய சிந்தனைகளையும் விதைத்திருக்கிறார்கள்.

ஆணாதிக்க மனோபாவத்தில் பெண்களை அடக்கி ஆள நினைப்பது, கற்பு என்ற வார்த்தையும். ஒழுக்க ரீதியிலான கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டும் தான் என நினைப்பது போன்ற ஆண்களின் மரபணுக்களிலேயே விதைக்கப்பட்ட கூற்றுகளின் மேல் சவுக்கை சுழற்றியிருக்கிறது இந்தப் பாடல்.

ஒரு பெண் நேசிக்க மறுத்தால் உடனே கொலை செய்ய வேண்டும் அல்லது அமிலம் வீச வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் தான் பெண்களுக்கு கொலைவெறி இருப்பதாக சித்தரித்துப் பாடுகிறார்கள்

சமீப காலங்களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில், காதல் தோல்வியடைந்தால் உடனே பெண்களை சரமாரியாகத் திட்டி ஒரு பாடலை வைத்து விடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. ஒருவரை நேசிப்பதற்கு இருக்கும் அதே சுதந்திரம் விலகுவதற்கும் இருக்கிறது என்ற உளவியலை போதிப்பதற்கு மாறாக உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவளை அடிக்க வேண்டும் கொல்ல வேண்டும் என்ற ரீதியில் வன்முறையை தூண்டி விடும் வேலைகளைத் தான் திரைப்படங்கள் செய்து வருகின்றன.

இந்த மனநிலையையும் சாடியிருக்கிறது இந்தப் பாடல். ஒரு பெண் நேசிக்க மறுத்தால் உடனே கொலை செய்ய வேண்டும் அல்லது அமிலம் வீச வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் தான் பெண்களுக்கு கொலைவெறி இருப்பதாக சித்தரித்துப் பாடுகிறார்கள் என்று பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆயிரமாயிரம் கனவுகளோடு திருமணம் முடிந்து வரும் பெண்ணுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் சரி இல்லாத கணவனை திருத்த வேண்டும் என்பது எத்தனை போராட்டமானதாக இருக்கும்.

இது மட்டுமின்றி, பொதுவாகவே கிராமப்புறங்களில் தொடங்கி அனைத்துக் குடும்பங்களிலும் ஆண்கள் தவறு செய்தாலோ பாதை மாறிச் சென்றாலோ சொல்லப்படும் வார்த்தை. ‘அதெல்லாம் கல்யாணம் பண்ணா சரி ஆயிருவான்’ என்பது தான். ஆயிரமாயிரம் கனவுகளோடு திருமணம் முடிந்து வரும் பெண்ணுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் சரி இல்லாத கணவனை திருத்த வேண்டும் என்பது எத்தனை போராட்டமானதாக இருக்கும். ‘இறைவி’ திரைப்படத்தில் இந்த உளவியலை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதையே தான் பகடியாக சாடியிருக்கிறது இந்தப் பாடலும்.

ஆனால் இந்தப் பாடலை எந்த ஆணும் பகடியாக எடுத்துக் கொள்ளவில்லை உண்மைகள் உறைக்கவே செய்திருக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் ஒளிபரப்பாகிய போது திரையரங்குகளில் ஆண்கள் சாதித்த மௌனமே சாட்சி. அதுதான் இந்தப் பாடலின் வெற்றியும் கூட.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!