28.5 C
Chennai
Thursday, February 22, 2024

இந்தியாவின் தலைசிறந்த முதல் பெண் ஆளுமைகள்…!

Date:

எல்லாவற்றிலும், முதலிடத்திற்கு என்று தனி மதிப்பு உள்ளதல்லவா. நம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் அதுவரை ஆண்களே இருந்துவந்த நிலையில் தாங்கள் எதிர்கொண்ட தடைகள், மறுப்புகள், அத்துமீறல்கள், சீண்டல்கள் என எல்லாவற்றையும் துச்சமென கருதி, எதிர்த்துப் போராடி முதன் முதலாக கால்பதித்த சில வீரப்பெண்மணிகள் நிச்சயமாக வழிகாட்டிகளே. பெண்களை புனிதமாகக் கருதும் இந்தியாவில் அப்படி சில ஆளுமைகளின் பட்டியல் இதோ.

 • 1848: சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
 • 1883: சந்திரமுகி பாசுவும், கடம்பினி கங்குலியும் இந்தியாவிலும் பிரித்தானியப் பேரரசிலும் பட்டம் பெற்ற முதல் பெண்கள்.
 • 1886: கடம்பினி கங்குலியும், ஆனந்தி கோபால் ஜோசியும் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள்.
 • 1898: சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.
 • 1905: சுசான்னே டாட்டா மகிழுந்தை (Car) ஒட்டிய முதல் இந்தியப் பெண் ஆனார்.
 • 1912: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
 • 1917: அன்னி பெசண்ட் இந்திய தேசியக் காங்கிரசின் முதல் பெண் தலைவர்.
 • 1925: சரோஜினி நாயுடு இந்திய தேசியக் காங்கிரசின் இந்தியாவில் பிறந்த முதல் பெண் தலைவரானார்.
 • 1936: சரளா தாக்ரல் விமானத்தை ஓட்டிய முதல் பெண் ஆனார்.
 • 1937: முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி.
 • 1944: அசிமா சாட்டர்ஜி இந்தியப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்.
 • 1947: ஐ.நா.விற்கான முதல் இந்திய பெண் தூதர் விஜயலட்சுமி பண்டிட்.
 • 1947: இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு.
 • 1950: இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா.
 • 1953: ஆம் ஆண்டு விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண் மற்றும் முதல் இந்தியர்.
 • 1957: தாரா செரியன் சென்னையின் முதல் பெண் மேயர். 
 • 1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண்.
 • 1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் ஆவார்.
 • 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.
 • 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.
 • 1970: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் கமல்ஜித் சந்து.
 • 1972: ஆம் ஆண்டு கிரண் பேடி இந்தியக் காவல் துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.
 • 1984: பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
 • 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி (Train) ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
 • 1988: தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்.
 • 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி .
 • 1991: மும்தாஜ் காசி டீசல் தொடர்வண்டி (Train) ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.
 • 1994: முதல் உலக அழகியான இந்திய பெண் சுஸ்மிதா சென்.
 • 1997: விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் கல்பனா சாவ்லா.
 • 1999: ஆம் ஆண்டு சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
 • 2007: பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
 • 2009: மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
 • 2018: இந்திய விமானப் படையின் போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி அவானி சதுர்வேதி.

Also Read: சிறந்த பெண் ஆளுமைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பொன்மொழிகள்!

பெண்கள் சிறப்பை போற்றும் 25 பொன்மொழிகள்!

வரலாற்றில் பெண்கள் – மகளிர் தின சிறப்புப் பதிவு!!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!