Home நலம் & மருத்துவம் மழைக்காலத்திற்கான மேக்-அப் ரகசியங்கள்..!

மழைக்காலத்திற்கான மேக்-அப் ரகசியங்கள்..!

மழைக்காலம் தொடங்கிவிட்டது. மாலை வீடு திரும்பும் போது மழை வந்தால் கூட பரவாயில்லை. காலை அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ செல்லும் போதே மழை வந்து விடுகிறது. காலையிலேயே உடைகள் நனைந்து, அலங்காரம் கலைந்து தான் அலுவலகத்திற்குள்  செல்ல வேண்டும். சாலையில் காணும் பெரும்பாலான பெண்கள் முகத்தில் இந்தப் பதற்றம் தெரிகிறது. இதோ மழைக்காலத்திலும் புத்துணர்ச்சியோடு இருக்க சில குறிப்புகள்.

முக அழகுக் குறிப்புகள்

தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம். எனவே, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின், கிளென்சர் (Cleanser) பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு,  ஐஸ் கட்டிகள் வைத்து,  முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில் அதிகமாக வியர்ப்பதைக்  குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், புதிதாக வைத்திருக்க உதவும்.

make up tipsஇந்தக் காலத்தில் , மேக்-அப் செய்வதற்கு முன் பவுண்டேஷன் மற்றும் அழகு கிரீம்கள் (Face Creams) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால் தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றைத் தவிர்க்க உதவும்.

இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில் முகம் இன்னும் வறண்டு காணப்படும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின் தண்­ணீரால் கழுவ வேண்டும்.

கண்களைப் பாதுகாக்க

கண் அலங்காரத்திற்கு, தண்­ணீரில் கரையாத ஐ லைனர்கள் மற்றும்  மஸ்காரா உபயோகிக்க வேண்டும். மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட் லிப்ஸ்டிக் தான் சிறந்தது.

கூந்தலைப் பாதுகாக்க

மழைக்காலத்தில், கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கார்காலத்தில் கூந்தலைப் பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்றுக் காணப்படும். கூந்தல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். மேலும், காற்றில் உள்ள ஈரப்பதம், கூந்தலை வலுவிழக்கச் செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற காலங்களில், கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலாம். தலையை சற்றே தளர்வாக பின்னலாம். இறுக்கமான பேன்டுகள் போடுவதோ, தலையைப் பின்னாமல் விடுவதோ கூடாது.

உடைகளில் கவனம் தேவை

மழைக்காலத்தில் சாலைகளில் சேற்று நீர் தேங்கி இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் வெளிர் நிற உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது.

அதே போல் டெனிம் ஜீன்ஸ் போடுவதைத்  தவிர்க்கவேண்டும். இறுக்கமாக இல்லாத காட்டன் உடைகளையோ, த்ரி போர்த் பேண்ட்களை அணியலாம். மழைக்காலத்தில் மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவான நகைகளை அணியலாம்.

எப்போதும் குடையும், ரெயின் கோட்டும் அவசியம். எனவே, மனதிற்கு இதமான நிறங்களில் அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். மழைக்காலத்தில் லெதர் ஷு, ஹை ஹீல்ஸ் போன்றவைகளை தூக்கி தூரப் போடுங்கள். லைட் வெயிட் செருப்புகளை உபயோகியுங்கள்.

இன்னொரு முக்கியக் குறிப்பு, இப்போதெல்லாம் நாம் நனைந்து விடுவோம் என்று வருகிற கவலையை விட நம் கைபேசி நனைந்து விடும் என்று தான் பலரும் பதறுகிறோம். எனவே, கைபேசியைப் பாதுகாக்க மழைக்காலங்களில் எப்போதும் ஒரு சிறிய நெகிழிப் பையை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -