வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இளமையாகலாம்…. உங்களை ஜொலிக்கவைக்கும் 5 எளிமையான வழிகள் இதோ…

Date:

என்றும் இளமையான தோற்றம் என்றால் யாருக்குத்தான் விருப்பமில்லை. அப்படி 30 வயதைக் கடந்த பின்பும் இளமையாக இருக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

1. மஞ்சள் :

மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மருத்துவக் குறிப்புகளை உள்ளடக்கியது மஞ்சள். மஞ்சள் கிருமிநாசினியாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மஞ்சள் சமையலில் மட்டுமல்லாமல், சருமத்தைப் பாதுகாக்கவும் மஞ்சள் பெரும் உதவியாக இருக்கிறது. நம் முன்னோர்கள் மஞ்சளை முகம் முழுவதும் பூசிக் குளித்தார்கள். என்றும் இளமையாக இருக்கவும் மஞ்சளை பயன்படுத்தினார்கள்.

2. துளசி :

சூரிய கதிர்களால் ஏற்படும் சருமச் பிரச்சினை, மாசுபாட்டால் ஏற்பட்ட சரும அழுக்குகளை நீக்க, மிக அற்புதமான மூலிகை துளசி. இது சருமத்தில் வறட்சியை குறைக்கவும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக மின்னும். துளசி சாறை பிழிந்து பருத்தித் துணியில் முக்கி முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

3. பட்டை :

பட்டை புதிய செல்களை உற்பத்தி செய்யவும், கொலாஜின் அடுக்குகளைப் பராமரிக்கவும் பட்டை பயன்படுகிறது. இந்தக் கொலாஜின் அடுக்கின் ஆரோக்கியத்தைப் பொறுத்துத் உங்கள் இளமை தோற்றம் அதிகரிக்கவும் குறையவோ செய்யும்.

4. ரோஸ்மேரி :

இளமையாக இருக்க முக்கிய முதல் அறிகுறி சருமச் சுருக்கங்கள். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இறுகச் செய்ய ரோஸ்மேரி மிகவும் உதவும். ரோஸ்மேரி எண்ணெய்யை இரண்டு நாளைக்கு ஒருமுறை முகத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

5. கிராம்பு :

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத் துளைகளை சுவாசம் பெறச் செய்கிறது. நீங்கள் பயன்படுத்தும் முகப் பூச்சுடன் கிராம்பு எண்ணெய் ஒரு துளி சேர்த்து முகத்தில் தடவுங்கள். இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Note: இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை பொதுப் பயன்பாட்டுக்கானவை. எதையும் அளவோடு பயன்படுத்தவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி அவர்களின் சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம்(lunar eclipse) எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!