22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடித் தடம்: 4 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

Date:

தனது தந்தை மற்றும் செல்ல நாயுடன், வேல்ஸில் பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் நடந்து சென்றபோது, ​​டைனோசர் தடம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் 4 வயது சிறுமி லிலி. இது உலகெங்கிலும் உள்ள பல்லுயிரியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டைனோசர் காலடித்தடம் மூலம் அவற்றின் உண்மையான கால் எப்படி இருந்திருக்க முடியும், அவை எப்படி நடந்திருக்கின்றன என்பதை அறிய இது உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

10 சென்டிமீட்டர் நீளம் கொண்ட டைனோசரின் இந்த கால்தடம், சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இத்தனை ஆண்டு காலம் ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றது. 75 சென்டிமீட்டர் (29.5 அங்குலம்) உயரமும், 2.5 மீட்டர் (சுமார் 8 அடி) நீளமும் கொண்ட ஒரு டைனோசரால் இந்த தடம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எந்த வகையான டைனோசர் எனக் கூறமுடியவில்லை.

வேல்ஸ் தேசிய அருங்காட்சியகத்தின், வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆராயும் அறிஞர் சிண்டி ஹோவெல்ஸ் “இதுவரை இந்தக் கடற்கரையில் கிடைத்த கால்தடங்களிலேயே இந்த கால்தடம் தான் மிகவும் சிறந்தது” என்கிறார்.

இதற்கு முன் பெண்டரிக்ஸ் கடற்கரையில் காணப்பட்ட கால்தட மாதிரிகளில், அதிகமான மாதிரிகள் டைனோசர்களைக் காட்டிலும் முதலை வகையைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.

“லிலி மற்றும் அவரது தந்தை ரிச்சர்ட் தான் இந்த கால் தடத்தைக் கண்டுபிடித்தார்கள்.” எனக் கூறுகிறார் லிலியின் தாய் சாலி.

மேலும் அவர் கூறுகையில் “கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, அப்பா, அங்கே பாருங்கள் என லிலி, டைனோசரின் தடத்தைப் பார்த்துக் கூறினாள். உடனே அதனைப் புகைப்படம் எடுத்தார் ரிச்சர்ட். வீட்டுக்கு வந்த பின், தான் எடுத்த டைனோசரின் கால்தடப் படத்தை ரிச்சர்ட் காட்டினார். அது ஒரு உண்மையான டைனோசரின் கால் தடத்தைப் போல மிக நன்றாக பிரமாதமாக இருந்தது இருந்ததாக ரிச்சர்ட் நினைத்தார். லிலியின் பாட்டி தான் உள்ளூர் நிபுணர்களையும் புதைபடிவ ஆர்வலர்களையும் விசாரணைக்கு அணுகும்படி ஊக்குவித்தார். நானும் நிபுணர்களை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு அவர்கள் இது தொடர்பான ஆய்வை முன்னெடுத்துச் சென்றார்கள்.”

இதனைத் தொடர்ந்து, டைனோசரின் கால் தடம் சட்ட ரீதியாக அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக நீக்கப்பட்டு விட்டது. கார்டிஃப்-ல் இருக்கும் தேசிய அருங்காட்சியம் கொரோனா தொற்று காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கின்றது. அருங்காட்ச்சியகம் திறந்தபின் அங்கு கொண்டு செல்லப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது மூடப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்பட்டதும், லிலி மற்றும் அவரது பள்ளி வகுப்பை சேர்ந்தவர்கள் இந்த காலடித்தடத்தை பார்க்க அழைக்கப்படுவார்கள் என்றும், மேலும் அதில் “லிலி”யின் பெயரை அதிகாரப்பூர்வ “கண்டுபிடிப்பாளர்” என்று பட்டியலிடப்படும் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“டைனோசரின் காலடித் தடத்தை கொண்டு, விஞ்ஞானிகள் டைனோசரின் உண்மையான காலின் வடிவத்தை நிறுவ உதவியாக இருக்கும்” என வேல்ஸ் தேசிய அருங்காட்சியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Also Read: டைனோசர் முட்டை பற்றி அறிவியலாளர்களுக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!