28.5 C
Chennai
Tuesday, February 27, 2024

உலகில் மிகவும் ஆபத்தான 10 விலங்குகள்!

Date:

உலகில், மனிதர்களை போல் விலங்குகளும் பெருமளவில் வாழ்கின்றன. அவை மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நிலையை பொறுத்து அதனுடன் மனிதன் நெருங்கி பழகுகிறான். அப்படிப்பட்ட சூழலில், மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விலங்குகள் இறங்கு வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. கேப் எருமை (Cape Buffalo)

கேப் எருமை தனியாக இருந்தால் எப்போதும் யாரையும் தாக்குவதில்லை. ஆனால், தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் உணவுக்காக செல்கையில் கூட்டமாக கடக்கின்றன. அவ்வேளையில் தனது குட்டியோ அல்லது கூட்டத்தில் உள்ள ஒரு எருமை தாக்கப்பட்டால், தாக்கியவரை கூட்டமாக சேர்ந்து கடுமையாக தாக்கி கொன்றுவிடும். எனவே இந்த விலங்கு மிகவும் ஆபத்தானது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. திரைப்படங்களிலும் மரணத்திற்கு அறிகுறியாக எருமைகள் காட்டப்படும் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

dangerous buffelo
Getty

9. கூம்பு நத்தை (Cone Snail)

வெப்பமண்டலத்தில் உள்ள சூடான நீரில் கூம்பு நத்தைகள் காணப்படுகிறது. இது பழுப்பு வெள்ளை பளிங்கு கற்கள் போல் காட்சியளிக்கும். பாறைகளின் இடுக்கில் அல்லது பாறைகளுக்கு அருகில் உள்ள மணல் அடியில் புதைந்து இருப்பதை காணமுடியும். இந்த நத்தை 4 முதல் 6 அங்குலம் வரை வளர்கிறது. அதன் பற்களில், கொனோடாக்சின் எனப்படும், விஷம் உள்ளது. இந்த நத்தை கடித்தால், நரப்பு செல்களின் செயல்பாடுகள் முடங்கி பக்கவாதம் ஏற்படும்.

dangerous cone
Image credit: AAP Image/Melbourne University/David Paul

8. தங்க டார்ட் விஷத் தவளை (Golden Poison Dart Frog)

தவளை இனத்தில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே மிகவும் ஆபத்தானதாகும். அதில், ஒன்று தான் தங்க டார்ட் விஷத் தவளை. இதன் விஷம் டாட்ராச்சோடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு தவளை 10 ஆட்களை கொல்லும் அளவிற்கு விஷம் கொண்டிருக்கும். இந்த வகை தவளைகள், கடல் அரிப்பினால் அழிந்து வருகிறது. எனவே இது அழிவுநிலை விலங்கின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

dangerous frog
Getty
Did you know?
உலகம் முழுவதும், 6,300 க்கும் அதிகமான தவளை இனங்கள் உள்ளன!

7. பெட்டி ஜெல்லிமீன் (Box Jellyfish)

இந்தோ-பசிபிக் கடலில் பெரும்பாலும் இந்த பெட்டி ஜெல்லி மீன்கள் காணப்படுகிறது. இந்த முதுகெலும்பற்ற ஜெல்லி மீன்கள், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் உலகின் விஷமான மீன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 10 அடி நீளம் வரை வளர்கின்றன. ஒரே நேரத்தில், இதயம், நரம்பு மண்டலம் மற்றும் தோல் செல்களை தாக்கும் நச்சுத் தன்மை கொண்டுள்ளது.

dangerous jelly
Getty

6. பஃபர்ஃபிஷ் (Pufferfish)

பஃபர்ஃபிஷ் உலகம் முழுவதும் வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. இது உலகின் மிகவும் விஷத்தன்மை கொண்ட மீனாக கருதப்படுகிறது. ஆனால், இந்த மீனை பயிற்சி பெற்ற சமையல்காரர்கள் உணவாக தயாரிக்கின்றனர். இந்த மீ்ன் டெட்ரோமோடாக்சின் சயனைடை விட 1,200 மடங்கு விஷத்தன்மை கொண்டதாகும். இதன் நாக்கு மற்றும் உதடுகளை நாம் தொட்டாலும் இறக்க நேரிடும்.

dangerous puffer
Getty

5. கருப்பு மாம்பா (Black Mamba)

இது பாம்பு வகையை சேர்ந்ததாகும். கிங் கோப்ரா போன்ற பாம்பு இனங்கள் மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும், கருப்பு மாம்பா வேகமாக பாய்வதால் மிகவும் ஆபத்தானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது 14 அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்த பாம்பு இனம், அச்சுறுத்துபவரை மட்டுமே தாக்குகிறது. ஆனால், பத்து பேருக்கு பயன்படும் விஷம் ஒருவர் உடலில் பாயும் அளவிற்கு தாக்கும்.

dangerous snake
Getty

4. உப்பு தண்ணீர் முதலை (Saltwater Crocodile)

இது தனது பாதையில் கடக்கும் எந்த ஒரு உயிரினத்தையும் ஆக்ரோசமாக தாக்குகிறது. இது எளிதில் துண்டாக்கவும் செய்யும். இந்த கொடூரமான முதலை 23 அடி நீளம் வரை வளரும். ஆண்டுதோறும் உப்பு தண்ணீர் முதலையால் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இதன் தாடை உப்பு தண்ணீரால் வலிமையாக இருக்கிறது.

dangerous corcodaile
Getty
Did you know?
உப்பு நீர் முதலையால் தாக்கப்பட்டு, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுக்கணக்கானோர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்

3. டெட்ஸே ஈ (Tsetse Fly)

இது மிகச்சிறிய வகை பூச்சியாகும். இது உலகின் மிக ஆபத்தான பூச்சியாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சஹாரா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த ஈ தான் ஆப்பிரிக்காவில் ஸ்லீப்பிங் நோய் பரவ காரணமாக உள்ளது. இந்த ஈயை தவிர்க்க அடர்நிற ஆடைகள் அணிவது சிறந்தது.

dangerous ee
Getty

2. கொசு (Mosquito)

உலகில் 3000 க்கும் மேற்பட்ட இனங்கள் பரவி காணப்படுகிறது. இது ஆண்டு ஒன்றுக்கு இரண்டாவது அதிகப்படியான இறப்புகள் நிகழ காரணமாக அமைகிறது. இதன் மூலம் தான் உலகின் பல கொடிய வைரஸ்கள் பரவியுள்ளன. உலகில் வாழும் மக்களில் சரிபாதி வீதத்தினர் கொசுவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

dangerous musq
Getty

1. மனிதர்கள் (Human)

எல்லாவற்றிக்கும் மேலாக மனிதர்களான நாமும் விலங்குகளாக தான் நடந்துக் கொள்கிறோம். 10,000 க்கும் அதிகமான ஆண்டுகளாக மனிதர்களால் மனிதர்கள் இறக்கும் விகிதம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இயற்கையை அழித்தல், புவி வெப்பமடைதல், காடுகள் மற்றும் பவளப்பாறைகள் அழித்தல் போன்ற அனைத்திலும் மனிதனே முக்கிய காரணமாகிறான். அது மட்டுமின்றி இன்னும் ஏராளமான விஷயங்களில் நாம் கொடூரமாக நடந்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் அழித்து வருகிறோம்.

இவை அனைத்திலும் மனிதர்கள் மனிதனை அழிப்பதே கொடூரமானதாக உள்ளது. எனவே தான் மனிதன், கொடூரமான விலங்குகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளான்.

Also Read: வேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!