புயல் எச்சரிக்கை கூண்டு எதற்காக? கூண்டுகளும் அவை விளக்கும் சூழல்களும்…

Date:

பொதுவாக புயல் காலங்களில் புயல் எச்சரிக்கை எண் கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், இதில் கூண்டுகளின் எண்கள் எந்த கூழ்நிலையை குறிக்கின்றன என்பது பெரும்பாலோனாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் இருக்கின்றன.

எதற்காக இந்த எண் கூண்டு

ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை. புயல் மையம் கொண்டது முதல், அதி தீவிர புயலாக மாறுவது வரையிலான மாற்றங்களை மக்களுக்கு அறிவிப்பதற்கு இந்த புயல்கூண்டு ஏற்றும் முறை பின்பற்றப்படுகிறது.

1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: புயல் உருவாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகின்றது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அறிவிப்பதற்கு இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:  புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதற்காக ஏற்றப்படுவது. இந்த எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: திடீர் காற்றோடு, மழை உருவாகக் கூடிய சூழல் ஏற்படும்போது 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:  மோசமான வானிலையால் துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதை தெரியப்படுத்த இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

5ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: துறை முகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதை எச்சரிக்கை செய்வதற்காக இது ஏற்றப்படுகிறது.

6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: துறை முகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை எச்சரிக்கை செய்வதற்காக இந்த கூண்டு ஏற்றப்படுகிறது.

7ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:  துறைமுகங்கள் வழியாக அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

8ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: அபாயமிக்க புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை தெரிவிப்பதற்காக இது ஏற்றப்படுகிறது.

9ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:  அபாயமிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை தெரிவிப்பதற்காக இது ஏற்றப்படுகிறது.

10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் வழியாக அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதற்கு இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

11ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பு முற்றிலுமாகத்துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!