கஜா புயல் இன்று மாலை 4 மணிக்குள் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 80 முதல் 100 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புயல் இன்று இரவு 8.00 முதல் 11.30 மணி இடையே அளவில் பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது.

சற்றுமுன் கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 240 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 217 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read: இதற்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய 6 புயல்கள்
ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழப்பி அடிக்கும் கஜா புயல் பற்றி தற்போது கிடைத்துள்ள நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்.
- தென்மேற்காக நகர்ந்து வந்த கஜா புயல், இன்று பிற்பகலுக்கு மேல் நேர் மேற்காக சென்னை திசையில் நகர்ந்து வருகிறது. ஆனால், பெரிதாக மாற்றம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
- புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக அரசு ஊழியர்களையும் மாலை 3 மணிக்கே பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சென்னையிலும் சில பகுதிகளில் பிற்பகலுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
- சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தாழ்வான இடங்களில் இருப்போர் மேடான இடங்களில் தஞ்சமடைய பேரிடர் மேலாண்மை ஆணையம் சற்று முன் அறிவுருத்தியுள்ளது.
- புயல் பாதிப்புள்ள 7 மாவட்டங்களில், இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சாலை பயணத்தை கைவிடுமாறும், அரசு மற்றும், தனியார் பேருந்துகளை இந்த நேரத்தில் இயக்க வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
- சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூரில் 9 – ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகையில் 10 – ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- புயல் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடை பட்டால், போர்கால அடிப்படையில் மின் சீரமைப்புப் பணிகளைச் செய்திடத் தயார் நிலையில் உள்ளதாக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
- கஜா புயல் பாதிப்பு குறித்து தகவல் அறிய உதவி கோர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் – 04362-230456
திருவையாறு- 04362-260248
பூதலூர்- 04362-288107
ஒரத்தநாடு – 04372-233225
கும்பகோணம் – 0435-2430227
திருவிடைமருதூர் – 0435-2460187
பாபநாசம்- 04374-235049
பட்டுக்கோட்டை- 04373-235049
பேராவூரணி- 04373 -232456
திருவாரூர் – 04366- 226040/ 226050 / 226080/ 226090
நாகப்பட்டினம் – 04365 – 251992
Also Read: அச்சுறுத்தும் கஜா புயல் – பொதுமக்களுக்கு 10 டிப்ஸ்
இது தவிர அவசர கால உதவி எண் 1077-ஐயும் மக்கள் பயன்படுத்தலாம். 04365 251992 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் – 044 – 25384510, 25384520, 25384530, 25384540. 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரைப் பதிவு செய்யலாம்.