தமிழகத்தில் பருவமழை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ‘தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை’ எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
- தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம்.
- பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள்: பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச் விளக்குகள், முகக்கவசங்கள்.
மேலும் இடி மின்னல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் ‘தேசிய பேரிடர் மேலாண்மை’ மற்றும் ‘தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை’ வெளியிட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Also Read: மழைக்காலத்தில் பரவும் 7 நோய்கள் என்னென்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?