புயல்களில் இருந்து மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

Date:

ஏற்கனவே வந்த கஜாவின் பாதிப்பு கண்ணை விட்டு அகலாத நிலையில், அடுத்து ஏதேனும் புயல் வந்தால் எம்மாதிரியான சேதங்களை ஏற்படுத்தும் என்ற பயம் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களை கலங்கடிக்கிறது. இந்நிலையில் இந்த புயல் காற்றில் இருந்து மரங்களைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றிப் பார்ப்போம்.

CycloneGaja_CoconutTree_

தென்னை

தென்னை மரங்களைப் பொறுத்தவரை மகசூல் தரும் தென்னை மரங்களில் தலை பாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும். எனவே, இளம் ஓலைகளைத் தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுவது நல்லது. இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம்.

TREE CYCLONEபுயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால், தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

தோட்டக்கலைப் பயிர்கள்

  • காற்று வீசும் சமயம், காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில், பக்கவாட்டுக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம். கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும்.
  • தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.
  • உரமிடுதல் போன்ற பணிகளுக்காக மரத்தை சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை தற்சமயம் மேற்கொள்ளாமல், கன மழை மற்றும் காற்று கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது.
  • வாழைத் தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.
  • நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் மழை நீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

coconut-Gaja- TREE FELLவயல் மற்றும் தோப்பில் மழைநீர் வழிந்து செல்வதற்கான வாய்க்கால்களை தூர்வாரி வைத்துக்கொள்வது நல்லது. வயல்/தோப்பிற்கு வெளியே குழிகளை வெட்டியும் அல்லது கிணற்றிலும் இந்த மழைநீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். இதனால் எதிர்வரும் கோடைகாலத்தை தண்ணீர் பஞ்சமின்றி சமாளிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!