ஆழ்கடலில் இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும். நம்ப முடியாத வகையில் நிகழ்ந்த, இப்படியொரு நிகழ்வை தாங்கள் பதிவு செய்திருக்கின்றோம் என்பதையே நம்ப முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்களால் தெரிவித்துள்ளார்கள்.
தெற்கு கரோலினா மாகாணத்தில் இருந்து, 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் சுமார் 450 மீட்டர் ( 1476 அடி) ஆழத்தில் இந்நிகழ்வு நடந்திருக்கின்றது. அதில் சுமார் 8 ஆடி நீளமுள்ள வாள்மீன் ஒன்றை, சுமார் 11 சுறா மீன்கள் விருந்தாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அதனருகில் ஒரு பெரிய மீன் ஒன்று ஒரு சுறாவை முழுதாக விழுங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (US National Oceanic and Atmospheric Administration (NOAA)) இந்த விடியோவை வெளியிட்டிருக்கின்றது.