“பாஸ்டன் டைனமிக்ஸ்” (Boston Dynamics) ரோபோ குழுவினர் சில சுவாரஸ்யமான நடன அசைவுகளுடன் ரோபோக்களை நடனமாட வைத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. தி காண்டூர்ஸின் (The Contours-1962) ஸ்மாஷ் ஹிட்டான “டூ யூ லவ் மீ” (Do You Love Me) பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடுகின்றன.
மனிதனை போலவும், நாய் மற்றும் நெருப்புக்கோழி போலவும் இருக்கின்ற இவற்றின் நடன அசைவுகள் இணையத்தில் வைரலாகின்றன.