மது அருந்துவது என்பது பெரும்பாலோர் செய்யும் ஒரு அன்றாட நிகழ்வு ஆகி விட்டது. சிலர் அளவுடன் குடிப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். சிலர் மதுவின் பிடியில் சிக்கி, உளறிக்கொட்டுவார்கள். மேலும் சிலர் நகைப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். குஜராத்தைச் சேர்ந்த “மதுப் பிரியர்” ஒருவர், ஒரு முதலைடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கர்ஜன் நகரில் ஜூனா பஜார் அருகே ஒரு குளத்தின் கரையில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் முதலையிடம் “நாங்கள் உங்களைச் சுற்றி ரோஜாக்களின் மாலையை வைக்க வேண்டும். என்னை மன்னியுங்கள், என் தாயே! அவர் முட்டையிடுவதற்காக இங்கு வந்திருக்கிறார். ஆனால் மக்கள் முட்டைகளை உடைக்கிறார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.
அங்கு கூடியிருந்த மக்கள் இதனை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிந்தனர். “சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பங்கஜ் படேல் மீது பதிவு செய்து விசாரிப்பதற்காக காவலில் வைத்துள்ளோம்.” என்று வதோதரா, கார்த்திக் மகாராஜ் துணை வன பாதுகாவலர் கூறினார்.
இது பற்றி பங்கஜ் படேல், “மா கோடியார்” தெய்வம் தனது கனவில் அவ்வாறு செய்யும்படி கேட்ட பின்தான் முதலையை தொட்டதாக, அதிகாரிகளிடம் கூறினார். இந்த தெய்வம் ஒரு முதலை மீது அமர்ந்திருப்பதாக பிரபலமாக இருக்கிறது.