டென்வரிலிருந்து ஹவாய் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரம் தீப்பிடித்ததை அடுத்து அவசர அவசரமாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
டென்வர் பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் பலர் திடீரென வானத்திலிருந்து குப்பைகள் விழுவதைக் கண்டனர். அதனை கேமராவில் பதிவும் செய்திருந்தனர்.இந்த எரிந்த குப்பைகள் பறந்து விழும் வீடியோவை @BAREESTHETICSCO ட்விட்டரில் பதிவேற்றினார்.
மேலும், விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், பற்றி எரியும் இயந்திரத்தின் வீடியோவையும் பதிவாக்கினார். அந்த வீடியோ பின்னர் MarcSallinger என்ற நபரால் ட்வீட்டரில் பகிரப்பட்டது. அந்த ட்விட்டர் பதிவில் “யுனைடெட் 328 இல் ஒரு பயணி விமானத்தின் இயந்திரத்திலிருந்து எரியும் தீப்பிழம்புகளின் வீடியோவை எடுத்தார். விமானத்தில் இருந்த சிலர் பிரார்த்தனை செய்தார்கள். ஜன்னலுக்கு வெளியே பார்த்தவர்கள் சிலர் தங்கள் அன்புக்குரியவரின் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். அப்போது விமானம் டென்வரில் இருந்து ஹவாய் செல்லும் வழியில் இருந்தது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து விமானமானது டென்வருக்கே திரும்பி பத்திரமாக தரையிறங்கியது.
சிதைந்த பாகங்கள் தரையில் விழுந்து கிடைக்கும் காட்சி.
Also Read: நடு வானில் பாதையை மறந்த விமானி – திசை மாறிய விமானம்!!
விமான பயணத்தின் போது உணவின் ருசி ஏன் மாறுபடுகிறது தெரியுமா? எளிய விளக்கம்…
மூலிகை எரிபொருளில் இயங்கிய இந்திய விமானம்.!! இது பெட்ரோலுக்கு மாற்றாகுமா?