உலகளவில் சுமார் 3000 உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ், இதுவரை 100,000 பேருக்கு தொற்றியுள்ளது. தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியிருக்கிறது.
சீனாவில், நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். தங்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து, தங்கள் செல்லப்பிராணிகளுக்கு முகமூடிகளை கொண்டு பாதுகாப்பது வரை பல விதங்களிலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, தம்பதிகள் வீடியோ அழைப்பின் மூலம் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன.
கொரோனா வைரஸ் பயத்தால் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்வதில்லை. ஹேண்ட்ஷேக்கிற்கு பதிலாக ஆண்கள் சிலர் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதற்கு ‘லெக் ஷேக்’செய்வதை இந்த காட்டும் வீடியோ வைரலானது.
கடந்த வாரம் ஜெர்மனியில் ஒரு அதிகாரி ஜெர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்க்கெல் – க்கு கை கொடுக்க மறுத்த வீடியோவும் வைரலானது.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய முறைப்படி வணக்கம் கூறி வரவேற்க அறிவுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பும் கைகுலுக்க வேண்டாமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மதம், இனம், மொழி போன்றவைகளால் ஏற்படும் சண்டைகள் இப்போது நடப்பதாக தெரியவில்லை. சிரியாவிலும் போர் இல்லை.
ஆனால், பல நாடுகளில் சூப்பர் மார்க்கெட்களில் டாய்லெட் பேப்பர் வாங்குவதில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. நேற்று, ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்குவதில் சில பெண்களுக்கு இடையே அடிதடியே நடந்துள்ளது. இந்தக்காலத்தில் டைனோசர் வாழ்ந்திருந்தால் கூட அடக்கி இருக்கக்கூடிய மனிதன் கண்ணுக்கே புலப்படாத கிருமிக்கு அஞ்சும் நிலை தான் மூன்று மாதங்களாக நிலவுகிறது.
வைரஸ் வேகமாக பரவுவதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.