திருவிழா கூட்டத்தில் உங்களுடன் வந்த நண்பர்களை நீங்கள் எப்போதாவது தவறவிட்டு, வேறொரு குழுவினருடன் சிறிது தூரம் சென்று பின் உங்கள் நண்பர்கள் குழுவிற்கே வந்த நினைவு இருக்கின்றதா? சமீபத்திய வைரல் வீடியோவில் ஒரு பெங்குவின் அதே போன்றதொரு நிகழ்வில் ஒத்துப்போகின்றது.
பால்க்லேண்ட்ஸ் என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். சுமார் 3,20,000 பென்குயின் ஜோடி ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இவ்விடத்தில் கூடிவருகிறது, என்று பாலக்லேன்ட்ஸ் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிரெதிரே வந்த இரு குழுவில், ஒரு பென்குயின் மட்டும் தன் குழுவிலிருந்து பிரிந்து, அந்நியர்களின் கூட்டத்துடன் கலந்து துள்ளத் தொடங்கியது. முதல் குழுவிலிருந்து ஒரு பென்குயின் ஓடி வந்து, வழிதவறிய அந்த ஒரு பென்குயினை தங்களுடன் அழைத்து செல்கிறது.
Also Read: பென்குயின் பற்றிய உங்களுக்குத் தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!