இணையத்தில் நாம் அடிக்கடி பார்த்திருக்கக் கூடிய ஒன்று தான் என்றாலும், இது சற்றே மாறுபட்ட நிகழ்வு. பொதுவாக மாடுகள் சாலையில் பயணிப்போரை முட்டிவிடும், அல்லது விரட்டி வரும்.
இங்கே, மாடு ஒன்று ரோடு ஓரத்தில் வேகமாக ஓடி வருகின்றது. எதிர் பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் வருகின்றனர். மாட்டைப் பார்த்ததும் அவர்கள் வலதுபுறம் இருந்த பெட்ரோல் பங்க் உள்ளே வாகனத்தை திருப்பி விடுகின்றனர். இதனை கவனித்த மாடு, அவர்களை துரத்த ஆரம்பிக்கின்றது. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த இருவரும் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடி விடுகின்றனர். ஆனால் வேகமாக ஓடிவந்த மாடு, வண்டிக்கு அருகில் இருந்த பெட்ரோல் பம்ப்பை ஒரே முட்டாக முட்டி சாய்த்து விட்டது. இது அங்கிருந்த CCTV-யில் பதிவாகி இருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் பங்க்குகள் மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தக்கூடியவை. வாகனத்தின் செயல்பாடும் அங்கே நிறுத்தப்படவில்லை. பொதுவெளியில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டியுள்ளது.