அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளஸ் மாடல் கைபேசி

0
56

அனைவராலும் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளஸ் (Moto G6 Plus) ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா (Motorola) நிறுவனம். மேலும், இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் (Amazon) மற்றும் மோட்டோ வலைதளங்களில் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான மோட்டோ ஜி6 பிளஸ் அறிமுகம்.!

இந்த கைபேசியை வாங்குவதற்கு பேடிஎம் (Paytm) மற்றம் ஜியோ போன்ற நிறுவனங்கள் சிறப்பு கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

மோட்டோ ஜி6 பிளஸ் 

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் பின்பு 1080×2160 பிக்சல் ரெசல்யூசன் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 636:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி6 பிளஸ்.

கேமரா:

 

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் பின்பக்கக் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 8 மெகாபிக்சல் முன்புறக் கேமரா எல்இடி பிளாஷ் உடன் இவற்றுள் இடம் பெற்றுள்ளது.

சேமிப்பு

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியைக் கொண்டுள்ளது, மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம் பெற்றுள்ளது. பின்பு வைஃபை, ப்ளூடூத், யுஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்புகளும் இவற்றுள் அடக்கம்.

 விலை:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200 எம்ஏஎச் பேட்டரி இடம் பெற்றுள்ளது, மேலும், இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.22,499-ஆக உள்ளது.