28.5 C
Chennai
Monday, March 4, 2024

உலகின் தலை சிறந்த 10 virtual அருங்காட்சியகங்கள்!

Date:

அருங்காட்சியகங்கள் என்பவை கலை, அறிவியல், மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்து அவற்றை பராமரித்து பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இத்தகைய அருங்காட்சியங்களுக்கு நாம் சென்று பார்வையிடுவதன் மூலம் நம் கலாச்சாரம், வரலாறு தொடர்பாக அறிந்துகொள்ள முடியும்.

என்னதான் புகைப்படங்களை ஆன்லைனில் பார்த்தாலும், நேரில் சென்று அருங்காட்சியகத்தில் பார்ப்பது போன்று இருப்பதில்லை. சரி நேரில் சென்று பார்த்தால் அதில் நிச்சயம் சுவாரசியம் இருக்க வேண்டும். அப்படி உங்களை நிஜ காட்சிக்கு அழைத்துச் செல்லும் சிறந்த மெய்நிகர்(virtual) அருங்காட்சியகங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. J Paul Getty Museum, Los Angeles

top 10 museums in the world
Credit: wikipedia

6,000 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான பொக்கிஷயங்கள் ஜே பால் கெட்டி மியூசியத்தில் நிறைந்துள்ளது. கூகுள்-ன் கலை மற்றும் கலாச்சாரம் (Google arts and culture Getty) லிங்க் மூலம் நீங்கள் பார்க்கலாம். அதில், ஒவ்வொன்றிலும் கிளிக் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். அவை, உங்களுக்கு கூடுதல் விவரங்களை காட்டுகிறது. Xplorit வழியாகவும் இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் பார்க்க முடியும்.

sources:getty.edu

2. Vatican Museums, Rome

museum12

உயரமான கூரைகள், சுவர் ஓவியங்கள் மற்றும் ஓவியத்திரைச்சுருள் ஆகியவை வட்டிகான் அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமானவை. இங்கு 360 டிகிரி கோண படங்களை நீங்கள் பார்க்க முடியும். ரோம் நகரை சுற்றி பார்க்கச் செல்வோர் வட்டிகான் அருங்காட்சியகத்தை மறந்திட வேண்டாம்.

sources:museivaticani.va

3. Guggenheim, Bilbao

museum13

நெர்வியன் ஆற்றின் கரையில் உள்ள ஃபிராங்க் கெஹ்ரியின் சிற்பம் (Frank Gehry’s sculptured ) டைட்டானியத்தால் செய்யப்பட்டது. இது மிகவும் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. போருக்கு பிந்தைய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் Rothko, Holzer, Koons, Kapoor ஆகியோரின் கலைப்படைப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளது.

sources: guggenheim-bilbao.eus

4. Natural History Museum, London

museum14

டைனோசர் முதல் பட்டாம் பூச்சிகள் வரை எல்லா படிகங்களையும் நீங்கள் இங்கு பார்க்க முடியும். இயற்கையின் வரலாற்று அருங்காட்சியகமாக விளங்கும், லண்டன் அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றே கூறலாம். இந்த கேலரிகள் இடைவெளியில் நீங்கள் தொலைந்து போனாலும், ஆன்லைன் வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

sources: nhm.ac.uk

5. Rijksmuseum, Amsterdam

museum15 1

இந்த அருங்காட்சியகத்தில் 80 கேலரிகளில் கலை மற்றும் வரலாற்று பொருட்களின் தொகுப்பு உள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அப்போது, ஆடம்பரமான விளக்குகள் மற்றும் புதிய கண்ணாடி கூரைகள் போன்றவை அமைக்கப்பட்டன. இதில், கிரேட் ஹால் பகுதியை ஆராயும்போது வெர்மீர், ரெம்ப்ராண்ட் மற்றும் பிற ஓவியங்களை பார்க்கலாம்.

sources:rijksmuseum.nl

6. National Museum of Modern and Contemporary Art, South Korea

museum16

இந்த அருங்காட்சியகம் பல தளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அச்சு, வடிவமைப்பு, சிற்பங்கள் பார்க்கலாம். அதில், கலைஞர்கள் சமகால கொரிய கலைப்படைப்புகள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

sources: mmca.go.kr

7. Musée d’Orsay, Paris

meseum17

இந்த அருங்காட்சியகத்தில், நீளமுள்ள வளைந்த கண்ணாடி கூரையின் கீழ், உலகின் மிகப்பெரிய impressionist படைப்பு தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், virtual tour, ஆன்லைன் அருங்காட்சியகம் ஆகியவையும் நீங்கள் பார்க்கலாம்.

sources:m.musee-orsay.fr

8. British Museum, London

museum18

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் குவிமாடத்தில் 3,212 கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் virtual tour செல்ல முடியும். அதை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். அத்துடன், ரொசெட்டா கல்(Rosetta Stone), எகிப்திய எலும்புகூடுகள் ஆகியவையும் நீங்கள் பார்க்கலாம்.

sources:britishmuseum.org

9. MASP, São Paulo, Brazil

museum19

மியூசியு டி ஆர்டே டி சாவோ பாலோ-வில் 14 முதல் 20 நூற்றாண்டு வரை உள்ள virtual கேலரிகளை பார்க்கலாம். கண்ணாடி பேனல்கள் அல்லது படிக ஈசல்களால் ஆன அருங்காட்சியகம் இங்கு உள்ளது. 1968 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் சிவப்பு-கற்றை அமைப்பு, கூகிள் ஸ்ட்ரீட் வியூ வழியாகவும் பார்க்க முடியும்.

sources:masp.org.br

10. National Gallery, London

museum20

டிராஃபர்கர் சதுக்கத்தில் உள்ள லண்டனில் நான்கு சிங்கங்களுக்கு பின்னணியாக 13 முதல் 20 ஆம் நூற்றாண்டின் 2,300 ஓவியங்கள், வாட்டர் கலர்கள், வரைபடங்கள் மற்றும் பிற ஐரோப்பிய கலைபொருட்கள் உள்ளன. உருவப்படங்கள் முதல் பெரிய கட்டிடம் வரை 360 டிகிரி virtual வடிவத்தை பார்க்கலாம்.

sources:nationalgallery.org.uk

உங்கள் சுற்றுப் பயணங்களில் இந்த இடங்களை நீங்கள் தவறவிட வேண்டாம். நிச்சயம் இந்த இடங்கள் உங்களுக்கு புதிய உலகை காட்டும்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!