நீச்சல் குளத்தில் குளிக்க பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், இந்த 10 நீச்சல் குளங்களை பார்த்தால், குளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ இல்லையோ! நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள். வாருங்கள்… அற்புதமான 10 நீச்சல் குளங்களை இங்கே காண்போம்.
10. One & Only Reethi Rah, Maldives
மாலத்தீவில் உள்ள ஒன் & ஒன்லி ரீதி ரஹ் ரிசார்ட்டில் உள்ள அமைதி குளம் ஒரு கட்டடக்கலையின் அற்புதம். இது கடலுக்கு அருகில் வரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆழமற்ற பகுதியில் படுக்கவும் முடியும்.
ஒன் & ஒன்லி ரீதி ரஹ் சிறந்த ஓய்வெடுக்கும் இடம். மணல் மற்றும் பனை மரங்களால் சூழப்பட்டு சொர்க்கம் போன்று காட்சியளிக்கும்.
9. அமெரிக்காவின் டல்லாஸ், ஜூல் ஹோட்டல். (The Joule Hotel, Dallas, USA)
டல்லாஸ், ஜூல் ஹோட்டலில் ஒரு கூரைக் குளம் உள்ளது. இது மிகவும் தனித்துவமானது. 1927ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஓட்டலில் ஒரு அறையின் முன்பு இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் கட்டிடமே மிகவும் சுவாரசியமானது. முதலில் இந்த கட்டிடம் நேஷனல் வங்கியாகவே இருந்துள்ளது.
இது கண்ணாடியை போல் காட்சியளிக்கும் குளம், இதில் நீங்கள் குளிக்கையில் கீழ் இருப்பவர் உங்களை நன்றாக பார்க்க முடியும்.
credit: The Joulecredit: The Joule credit: The Joule
8. கேம்ப்ரியன் ஹோட்டல், அடெல்போடன், சுவிட்சர்லாந்து ( The Cambrian Hotel, Adelboden, Switzerland)
ஒரு மலையை பார்த்தப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த குளம் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றியுள்ள அழகு உங்களை மூச்சடைக்க செய்யும். இந்த குளம் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும். பனிச்சறுக்காலில் ஏற்பட கூடிய கால் வலியை தணிக்கவல்லது.


7. சரோஜின், காவ் லக், தாய்லாந்து (The Sarojin, Khao Lak, Thailand)
தாய்லாந்தின் காவோ லக்கில் உள்ள சரோஜினி ரிசார்ட்ல் உள்ள குளம் வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்ட நீர் சோலையாக உள்ளது. சூரிய கதிர்கள் குளத்தின் மீது விழும் போது அது வரிசையாக அமைக்கப்பட்டுள்ள ஓடுகளின் சாயலை காட்டுகிறது. இந்த குளத்தை சுற்றி பெலிவியன்களும் அமைக்கப்பட்டுள்ளது.
Credit: The Sarojin Credit: The Sarojin Credit: The Sarojin
6. கிரேஸ் சான்டோரினி, சான்டோரின் கிரீஸ் (Grace Santorini, Santorini, Greece)
இந்த ஓட்டலின், முடிவில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அற்புதமாக கடலை பார்த்து நீல நிறத்தில் இந்த குளம் காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் பகல் நேர நீச்சலுக்கு அழகாக தோன்றும். மாலை நேரத்தில் நீச்சலடிக்கையில் சூரிய அஸ்தமனம் சிறப்பாக இருக்கும்.
Credit: Grace Santorini Credit: Grace Santorini Credit: Grace Santorini
5. ஜேட் மவுண்டன், செயின்ட் லூசியா ( Jade Mountain, St Lucia)
ஜேட் மவுண்டன் பார்த்து அமைந்துள்ள இந்த குளம் இயற்கையை பார்க்க ஒரு ஆச்சரியமான வாய்ப்பு. இங்கு 24 சரணாலய பாணியில் அமைக்கப்பட்ட இடங்கள் உள்ளது. இந்த குளம் சூப்பரான மற்றும் ஆடம்பரமான கடலையும், மலையும் பார்த்து இருக்கும் சரணாலயமாக இருக்கிறது. இந்த குளங்கள் உங்களின் தனியுரிமை. இதில், யாரும் குறுக்கிட முடியாது.
Credit: Queen Coco Credit: Jade Mountain Credit: Jade Mountain
4. ஆல்பின் பனோரமா ஹோட்டல் ஹூபர்டஸ், தெற்கு டைரோல், இத்தாலி (Alpin Panorama Hotel Hubertus, South Tyrol, Italy)
ஆல்பின் பனோரமா ஓட்டல் ஹூபர்டஸ், தெற்கு டைரோல் ஒரு வித்தியாசத்துடன் கூடிய குளமாகும். இது வானத்துடன் சேருவது போன்ற ஒளியை மாயை தோன்றும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அடி நீளமான கட்டுமானம் தரையில் இருந்து நாற்பது அடி உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை சுற்றி கண்ணாடி என்பதால், நீங்கள் நீந்தும் போது பறப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
Credit: Alpin Panorama Hotel Hubertus Credit: Alpin Panorama Hotel Hubertus Credit: Alpin Panorama Hotel Hubertus
3. உபுத் தொங்கும் தோட்டங்கள், பாலி, இந்தோனேசியா (Ubud Hanging Gardens, Bali, Indonesia)
இது இரண்டு பிளவு நிலை குளங்களை கொண்டுள்ளது. மேலிருந்து பார்க்க பிரிந்திருக்கும் குளம் போன்று தோன்றமளிக்கிறது. ஆனால், அருகில் நின்று பார்த்தால் ஒரு குளம் உயரமாகவும் மற்றொரு குளம் கீழேயும் இருக்கிறது. இதில், மேல் குளத்தில் நீந்தினால் நீங்கள் சுற்றியுள்ள காடுகளின் மரங்கள், விதவிதமான காட்சிகளை பார்க்கலாம்.
Credit: Ubud Hanging Gardens Credit: Ubud Hanging Gardens Credit: Ubud Hanging Gardens
2. சான் அல்போன்சோ டெல் மார், அல்காரோபோ, சிலி ( San Alfonso del Mar, Algarrobo, Chile)
இந்த குளம் 3300 அடி நீளம் கொண்டுள்ளதாக அளவிடப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. இதன் சிறப்பே, கடலுக்குள் நீங்கள் இருக்கையில் ஏற்படும் உணர்வை நீங்கள் இதில் பெறலாம். இது ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய குளமாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதில், நிரப்பப்பட்டுள்ள நீர் ஆண்டு முழுவதும் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
Credit: Crystal Lagoons Credit: Crystal Lagoons Credit: Crystal Lagoons
1. மெரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூர் (Marina Bay Sands, Singapore)
மெரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூரில் அமைந்துள்ளது. வெப்ப மண்டலங்களில் பனை மரங்களால் சூழப்பட்ட இந்த குளம் நதி போல தோற்றமளிக்கிறது. மெரினா பே சாண்ட்ஸில் விருந்தினராக நீங்கள் இருந்தால் இதில் நீந்தலாம். இது நகரத்தின் நடுவில் அதிசயமான காட்சியாக உள்ளது.
இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குளங்கள் அற்புதங்கள் தான். அருமையான கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இருந்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளன இந்த நீச்சல் குளங்கள்!