ஒருவர் நல்ல மனநிலையை பெற இயற்கையின் அழகும் காரணமாகவே இருக்கிறது. இயற்கை தன் அழகை வெளிப்படுத்த சில இடங்களில் வண்ணமயமாக காட்சியளிக்கும். இலையுதிர் காலத்தில் நீங்கள் இந்த வர்ணங்களின் மாயாஜாலத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பில், உலகில் இலையுதிர் காலங்களில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களின் புகைப்படங்களைப் பார்க்கலாம். இலையுதிர் காலத்தை ரசிக்க உலகிலேயே அழகான இடங்கள் இவைதான்.
Nara – Japan
ஜப்பானின் இந்த அழகிய காட்சி ஹானேம் செர்ரி மலரும் வேளையில் தெரிகிறது. இந்த காட்சியை ஜப்பான் நாட்டின் பல பகுதிகளிலும் இலையுதிர் காலத்தில் பார்க்க முடியும். கியோட்டோவிலிருந்து ஒரு குறுகிய ரயில் பயணம் மேற்கொண்டால் அழகை கண்டு ரசிக்கலாம்.

Forest of Dean – England
க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள இந்த பழங்கால வனப்பகுதி ஒரு காலத்தில் அசுர வேட்டை மைதானமாக பயன்படுத்தப்பட்டது. டீயூடர் போர் கப்பல்களை உருவாக்க அதன் மரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வண்ணமயமான இலைகள் ஒன்று கூடிய இடம் போன்று இந்த பகுதி காட்சியளிக்கிறது. இங்கு ஓக், பீச் மற்றும் ஸ்வீட் கஷ்கொட்டை மரங்கள் காணப்படுகிறது.

White Mountains – New Hampshire, USA
நியூ ஹாம்ப்ஷயர்ன் வெள்ளை மலை பார்க்க கண்கவர் தோற்றம் கொண்டதாக இருக்கிறது. அக்டோபர் துவக்கத்தில் நீங்கள் இந்த வழியாக செல்கையில் சிவப்பு மேம்பிள் இலைகளுக்கு நடுவில் கடந்துச் செல்லலாம்.

Loire Valley – France
மரங்களில் இலைகள் துளிர்விடும் நேரம் தான் லேயர் பள்ளத்தாக்கில் செல்ல சிறந்த காலம். திராட்சை தோட்டங்கள், வெப்ப கால கீரைகள், மஞ்சள், பழுப்பு நிறத்தில் இவற்றை நீங்கள் காணலாம். அது அறுவடை காலமாகவும் இருக்கும் எனவே வயல்களில் திராட்சை எடுப்பவர்களையும் நீங்கள் காணலாம்.

Huangshan Mountain – China
ஹுவாங்ஷன் மலை சீனாவின் அனைத்து மகிமையையும் காண சிறந்த இடமாகும். அக்டோபர் முழுவதும் அழகாகவும், பிரகாசமாகவும் சிவப்பு நிறமாக மாறும். அத்துடன், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயை நீங்கள் இந்த மலையிலிருந்து படம் எடுக்க முடியும். அதேபோல் இங்கிருந்து சூரிய உதயம் பார்க்க முடியும்.

Bishop Creek Canyon – California, USA
கலிபோர்னியாவில் உள்ள பிஷப் க்ரீக், பல வண்ண நிறங்களை உங்களுக்கு காட்சிபடுத்துகிறது. இங்குள்ள தங்க நிற இலைகள் பாறையின் பின்பகுதியில் ஆச்சரியமாக காட்சியளிக்கின்றன.

Pitlochry – Scotland
டம்மல் நதியையும் லோச் ஃபாஸ்கல்லியையும் பிரிக்கும் அணைக்கு அருகில், மரங்கள் இலையுதிர் காலத்திற்கு முன் இதுபோன்ற காட்சியை தருகின்றன. ஒவ்வொரு அக்டோபரிலும் பிட்லோக்சரில் இந்த அழகான காட்சியை நீங்கள் பார்க்க முடியும்.

Lombardy – Italy
மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற காட்சி. இதை நீங்கள் லோம்பார்டி முழுவதும் பார்க்க முடியும். இந்த இலைகள் உதிர்வதற்கு முன்பு பிரகாசமான மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த காட்சியை காண நீங்கள் கிராமபுறங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. அங்குள்ள பூங்காக்களுக்கு சென்றாலே போதும்.

Dandenong Ranges – Australia
மார்ச் மாதத்திற்கு பின் ஆஸ்திரேலியாவில் இலையுதிர்காலம் துவங்குகிறது. அந்நாட்களில் கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருக்கும். குறிப்பாக ஆல்பர்ட் நிக்கோலஸ் நினைவுத் தோட்டத்திற்கு செல்லுங்கள்.

Agawa Canyon – Canada
இலையுதிர் காலத்தில் அகவா கனியனுக்கு ரயில் பயணம் மேற்கொள்ளுங்கள். கனடா-அமெரிக்கா எல்லையிலிருந்து இந்த பயணம் துவங்கும். செம்படம்பர் மாதம் இறுதி முதல் அக்டோபர் மாத துவக்கம் வரை இலையுதிர் காலம் என்பதால் நீங்கள் விரைவாக பார்த்துமுடிக்க வேண்டும்.

இந்த படங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் சிந்தனை, உலகம் எவ்வளவு அழகானது என்பதாகத்தான் இருக்கும் என்றால் அது மிகையில்லை.
Also Read: உலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்!