விமான பயணத்தின் போது உணவின் ருசி ஏன் மாறுபடுகிறது தெரியுமா? எளிய விளக்கம்…

Date:

விமானம் நடு வானில் பறக்கும் போது ஏற்படும் இரைச்சல், ஈரப்பதம், காற்றழுத்தம் வெகுவாக குறைவது மற்றும் சுவை உணரும் திறன் மாறுபடுவது ஆகியவை விமான பயணத்தின் போது உணவின் ருசி மாறுபடுவதற்கு, முக்கிய காரணங்களாகும். ஆம், நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானமானது, அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது.

ஒரு சில சமயங்களில் சாதாரணமாக ஒரு தக்காளி சோறு சாப்பிட்டால் கூட அதிக சுவையுடன், நறுமணமாக இருக்கும். அதுபோல, உப்பு சேர்க்கப்பட்ட ஒரு சில உணவுகள் சுவை நுகர்வு தன்மை மிகவும் குறைவாக இருக்கும். விமானத்தில் சாப்பிடும் உணவு ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கான பல அறிவியல் காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

1. விமானத்தில் வழங்கப்படும் உணவு ஏன் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை?

விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன. லுஃப்தான்சா (Lufthansa) என்ற விமான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு விமான இயந்திரத்தில் ஏற்படும் ஜாரிங் (jarring) சத்தங்கள் இனிப்பு உணவுகளின் சுவையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது. அதே போன்று, விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது உணவுகளில் உப்பின் சுவை தன்மை, 20 முதல் 30 சதவிகிதம் குறைக்கப்படுவதாகவும், சர்க்கரையின் சுவை தன்மை 15 முதல் 20 சதவிகிதம் குறைக்கப்படுவதாகவும் லுஃப்தான்சா (Lufthansa) ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

food taste planes001
Credit: Supersmario/ Getty Images.

2. விமான நிறுவனங்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

2010 ஆம் ஆண்டின் லுஃப்தான்சா (Lufthansa) விமான நிறுவன கண்டுபிடிப்புகள், நாம் விமானத்தில் சாப்பிடும் உணவானது, நாவிற்கு சுவை உணர்வு திறனை குறைந்து உப்பு, காரமில்லாமல் இருக்கிறது. எனவே, விமானத்தில் பறக்கும் பயணிகளுக்கு ஏற்ற வகையில், அதிக சுவையூட்டல் மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்க்க அந்நிறுவனம் வழிவகுத்தது. அவை விமானம் காற்றில் பறக்கும் போது, உணவின் சுவையைத் தக்க வைத்துக்கொள்வதை உறுதி செய்தது.

இப்போது சிறிது காலமாக, விமான நிறுவனங்கள் மூலிகைகள், சிட்ரஸ் எண்ணெய்கள் மற்றும் சுவைகளை அதிகரிக்கும் மசாலாப் பொருள்களைச் இணைத்து தங்கள் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) பிளாண்டர் சீஸ்ஸை (blander cheese) வித்தியாசமான ருசியுடையதாக மாற்றியது. அவற்றுடன், ஆட்டின் சீஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பிசினஸ் கிளாஸில் (Business Class) தக்காளி ஆகியவற்றை இணைத்தது. 2019 ஆம் ஆண்டில், கேத்தே பசிபிக் (Cathay Pacific) ஒரு நேர்த்தியான கிராஃப்ட் பீர் (craft beer) ஒன்றை அறிமுகப்படுத்தியது. மேலும், வறுத்த பார்லி மற்றும் ஆரஞ்சு தலான் கொண்ட ‘பெட்ஸி’ (Betsy), விமானிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளாகும்.

food taste planes002
Credit: jetblue.com/

3. இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறதா?

ஆம்! விமானத்தில் பறக்கும் போது வீசும் வறண்ட காற்று, நம் சுவை உணர்வை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் அவை பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படுவதாய் தெரியவில்லை. இந்திய உணவுகளாய் இருப்பின் அவை ரெடி மிக்ஸ் போன்றவை கொண்டு செய்யப்படுகின்றன. துரித உணவுகள் மைக்ரோவேவ் செய்யப்பட்டு பேக் செய்யப்பட்டவை. ஒயின்கள் மெல்லியதாகி, காற்றில் இருக்கும் போது குறைந்த வலுவானதாக மாறும், மேலும் ஷாம்பெயின் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும்.

நீங்கள் ஒரு விமானத்தில் மதுவை உட்கொள்ளும் போது, உங்கள் ‘டேஸ்ட பட்’ (tastebuds) குறைக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காக விமான நிறுவனம் அதிக பவர் கொண்ட ஒயின்கள் மற்றும் நிறைய தக்காளி சாற்றை சேர்க்கிறது. அவை விமானம் அதிக உயரத்தில் பறக்கும் சமயத்தில், ​​தக்காளி சாறு அதன் தன்மையை இழந்து நாவிற்கு அதிக சுவையை அளிக்கிறது.

4. பயணம் செய்யும்போது எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்?

விரைவில் செரிமானம் ஆகக்கூடிய உணவு நல்லது. நீராதாரம் இருக்க கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக வெள்ளரிக்காய் போன்றவை. நீங்கள் எங்கு சென்றாலும், விருப்பமான உணவுகளை நீங்களே தேர்வு செய்வது உங்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். தாய் (Thai) மற்றும் இந்திய உணவு வகைகள் மசாலா மற்றும் சுவையூட்டக்கூடிய உணவுகள் ஆகும். அவற்றில், ஏலக்காய், எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

மேலும், விமானத்தில் பறக்கும் போது சில பாலாடைக்கட்டிகள், சோயா சாஸ் (soy sauce) மற்றும் கறி ஆகியவற்றில் உமாமி சுவைகள் உப்பு அல்லது சர்க்கரையை விட அதிக அளவில் இருக்கும். குறிப்பாக, நீங்கள் விமானத்தில் பறக்கும் போது, சாஸுடன் இருக்கும் இறைச்சியை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. ஏனெனில் சாஸ் (sauce), புரதம் முழுமையாக வறண்டு போகாமல் தடுக்கும் உணவுப்பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!