
உலகையே சுற்றி வலம் வந்த சொகுசு கப்பல்கள் பயணிகள் யாரும் இன்றி, கடற்கரையில் பாழடைந்து கிடக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகெங்கிலும் பயணம் செய்த நூற்றுக்கணக்கான கப்பல்களில் பயணிகள் யாரும் இல்லை என்பதால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவை வேறு வழியின்றி விற்கப்பட்டு உடைக்கப்பட்டும் வருகின்றன.
கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சொகுசு கப்பல்கள்!

பொதுவாக திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு புகழ் பெற்ற இந்த கார்னிவல் குரூஸ் லைன் (Carnival Cruise Line) சொகுசு கப்பல்கள் ஆடம்பர தொனியோடு வடிவமைக்கப்பட்டவை.
இத்தகைய விலை உயர்ந்த கப்பல்களின் நடுப்பகுதி இடிபட்டு (ஸ்கிராப்) கீறல்களுடன் தோற்றமளிப்பதால், துருக்கியில் உள்ள அலியாகா கப்பல் துறைமுகத்திற்கு விற்பதற்கு தயாராக உள்ளன. இந்த சொகுசு கப்பல்கள் இருக்கும் பகுதியில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட புகைப்படத்தில், கப்பல்களின் உடைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
Also Read: உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் இது தான்!
உடைக்கப்படாத பகுதியில் நீச்சல் குளங்கள் மற்றும் கோல்ஃப் மைதானம் உள்ளிட்டவை எவ்வளவு சிறப்பாக இருந்தவை இந்த கப்பல்கள் என காட்டுகின்றன. இவற்றை பார்க்கும் போது எப்படி இருந்த கப்பல் இப்படியாகிடுச்சே என்றே நினைக்கத்தோன்றும்.
மறு சுழற்சிக்கு போகும் சொகுசு கப்பல்கள்!

பொதுவாக கப்பல் நிறுவனங்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கப்பல்களை யாரும் வாங்க விரும்பவில்லை என்ற நிலையில், துருக்கி நாட்டில் இருக்கும் அலியாகா (Aliaga) துறைமுகத்துக்கு அல்லது பாகிஸ்தான் துறைமுகமான கராச்சிக்கு அருகிலுள்ள அலங், இந்தியா அல்லது கடானி போன்ற கப்பல் உடைக்கும் பகுதிக்கு கொண்டு சென்று மறு சுழற்சிக்கு உபயோகிக்கின்றன.
அலியாகாவுக்கு சேதமடைந்த கப்பல் வந்ததும், அந்தக் கப்பலின் தளவாடங்கள் முதல் குளியலறை வரை உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும். சொகுசு கப்பல்களின் பயணங்கள், ஐரோப்பாவில் தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் கப்பல் பயணத்தில் புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
கப்பல் பயன்பாட்டில் கடந்த ஆண்டு $150 பில்லியன் (இந்திய மதிப்பில் 11 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டு தொழில் வளர்ச்சியடைந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டில் புதிதாக செய்யப்பட்ட பல கப்பல்கள் இன்னும் பயன்படுத்தப்படாது கிடப்பில் உள்ளன.
செப்டம்பர் 2020 இல், கார்னிவல் கார்ப்பரேஷன் நிறுவனம், இனி வரும் நாட்களில் குறைந்த செயல்திறன் கொண்ட 18 கப்பல்களை விற்பனை செய்யும் முடிவை அறிவித்தது. இது அந்த நிறுவனத்தின் மொத்த கப்பல் எண்ணிக்கையில் 12% ஆகும். இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் 2021 ஆம் ஆண்டின், பயண திட்டத்தினை ஏற்கனவே வெளியிட்டிருந்தன.
பொதுவாக கடந்த நாட்களில், கப்பல்கள் பெரும்பகுதி சேதமடைவதற்கு முன்னர் பல முறை பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பினால் கோஸ்டா விக்டோரியா உட்பட சில கார்னிவல் கப்பல்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன, அவை வரும் ஜூன் மாதத்தில் உடைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் அமைந்துள்ள ஆலாங் துறைமுக நகரில் கப்பல் உடைக்கும் பகுதிக்கு சில கப்பல்கள் சென்றன.
பல கேளிக்கை, கொண்டாட்டங்களைக் கண்ட இவ்வளவு சொகுசு அம்சங்கள் நிறைந்த பெரிய கப்பல்கள், ஒரு கடற்கரையில் இடிக்கப்படுவதைக் காண்பது இதயத்தை கனமாக்க கூடியது.
மேலும் படங்கள் உங்கள் பார்வைக்கு…









Also Read: பயணத்திற்குத் தயாராகிறது உலகின் மிகப்பெரிய சொகுசுக்கப்பல்!!