இந்தியாவில், நீங்கள் சுற்றுலா செல்ல விருப்பினால் கர்நாடகா உங்களுக்கு ஏற்ற இடமாகும். ஏனெனில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கும், அழகான காடுகள், மலைகள், கோவில்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என பார்க்கும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகளை மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, வனவிலங்கு சரணாலயங்கள், இந்தியாவின் மிகச் சிறந்த கடற்கரைகள் மற்றும் காப்பித்தோட்டங்கள் என பல வித சுவாரஸ்யமான இடங்களும் இங்குள்ளது.

1. தண்டேலி

தண்டேலி உத்தர கனாடாவின் (வடக்கு கர்நாடகா) மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடமாக தண்டேலி உள்ளது. இந்தியாவிலேயே ஆற்று மிதவைப்படகு சவாரிக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாக தண்டேலி உள்ளது. அதுமட்டுமின்றி, தண்டேலியில் உள்ள ஆற்றைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஹார்ன்பில் போன்ற பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாகவும் திகழ்கிறது. தண்டேலியில் இருக்கும் காளி நதியானது, அதிக அளவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக திகழ்கிறது.
இங்குள்ள, தண்டேலி வனவிலங்கு சரணாலயம் மற்றும் அன்ஷி தேசிய பூங்கா போன்றவற்றிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இது, கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமாக விளங்குகிறது. தண்டேலி நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுபா அணை, தண்டேலியில் சிறப்பு வாய்ந்த முக்கிய இடமாகும். அதுமட்டுமின்றி, ஸ்கைக்ஸ் பாயிண்ட், ஷிரோலி சிகரம், தண்டேலப்பா கோயில் மற்றும் சிந்தேரி பாறைகள் போன்ற பகுதிகளும் தண்டேலியில் காணச் சிறந்த மற்றொரு அம்சமாகும்.
2. கோகர்ணா

கர்நாடகாவின் சிறந்த கடற்கரை நகரமாக கோகர்ணா திகழ்கிறது. இங்கு ஓம் பீச், ஹாஃப் மூன் பீச், குட்லே பீச், கோகர்ணா பீச், மற்றும் பாரடைஸ் பீச் போன்ற ஐந்து அழகிய கடற்கரைகள் அமைந்துள்ளன. கோகர்ணா கடற்கரையானது, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை தன்வசப்படுத்தி கொள்ளக்கூடிய சிறப்பு வாய்ந்த இடமாகும். இங்குள்ள மஹாபல்லேஸ்வரர் கோயில்கள் கலை, கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மகாபல்லேஷ்வர் கோயில் தவிர இங்கே மஹா கணபதி கோயில், உமா மகேஸ்வர் கோயில், பத்ரகாளி கோயில், வெங்கட ரமணர் கோயில், தாமரை கௌரி கோயில் ஆகியனவும் பிரபலமான கோயில்களாக திகழ்கின்றன. இங்குள்ள நீருக்கடியிலான விளையாட்டுக்கள், படகு சவாரிகள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. இங்குள்ள யானா என்ற நகரத்தில், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் மலையேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மன அழுத்தத்தை குறைக்கிறது.
3. ஹம்பி

ஹம்பி என்பது வடக்கு கர்நாடகாவில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு அழகான கோயில் நகரம் ஆகும். ஹம்பி உலகின் இரண்டாவது பெரிய நகரம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஹம்பியின் உண்மையான அடையாளம் ராமாயணத்தின் நிகழ்வுகளுடனான தொடர்பு என்று சொல்லப்படுகிறது. வேதத்தின் படி, ஹம்பி என்பது ராமாயண காவியத்தின் கிஷ்கிந்தா ஆகும். ஹம்பியில் அமைந்துள்ள 500க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் கலைக்கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இவ்விடம் யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமன் கோயில், கல் தேர், விஜய விட்டலா சுவாமி கோயில், விதலா கோயில் மற்றும் நந்தி சிலை ஆகியவை இந்த ஊரில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாகும்.
4. டான்டலி
கர்நாடகாவில் உள்ள முக்கியமான இடங்களில் டான்டலியும் ஒன்றாகும். இங்கு படகு சவாரிகள், மீன்பிடித்தல், சாகசங்கள், முகாம்கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இங்குள்ள் டான்டலி வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்ககூடிய ஒன்றாகும். அதேபோன்று, இங்குள்ள கலியாறு பகுதியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபாலமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மலை மற்றும் நிலப்பரப்பு இலையுதிர்காடுகள், ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த இடமாகும். குளிர்காலத்தில், டான்டலி ஒரு இனிமையான சுற்றுலா அனுபவத்தை நம் அனைவருக்கும் வழங்குகிறது.
5. சிக்மகளூர்

கர்நாடகாவின் காபி நகரம் என்று அழைக்கப்படும் சிக்மகளூர் முல்லயங்கிரி மலைத்தொடருக்கு புகழ்பெற்றது. இது மலையேறுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பிரபலமாக உள்ளது. இந்தியாவிலேயே பன்முகம் கொண்ட சுற்றுலாத்தலங்களுள் சிக்மகளூரும் ஒன்று. சிக்மகளூர் நகரத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மஹாத்மா காந்தி பூங்கா அமைந்துள்ளது. பசுமையான அழகுடன் விளங்கும் சிக்மகளூரில் மலைப் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள் கோவில்கள் என எண்ணற்ற பகுதிகள் இருப்பதால் இது சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, நீங்கள் விடுமுறை நாட்களில் கர்நாடகாவிற்கு சுற்றுலா செல்ல விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஓர் இடத்தை தேர்வு செய்து உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக சென்று மகிழுங்கள்!