நாம் அனைவரும் கடற்கரையில் நேரத்தை செலவிட விரும்புகிறோம். ஆனால், பல கடற்கரைகள் உலகில் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடியதாகவும் உள்ளது.
1Hanakapiai Beach

உலகில் மிகவும் ஆபத்தான கடற்கரையில், முதலிடத்தில் உள்ளது ஹனகபியா கடற்கரை தான். இது ஹவாய் தீவில் உள்ளது. கருப்பு பாறைகளால் சுழப்பட்ட இந்த கடற்கரையில், அலைகள் எதிர்பாராத விதமாக சுழலாக மாறுகிறது. இதில், சிக்கி பல நீச்சல் வீரர்கள் காணாமல் போன நிலையில், அவர்களின் உடல்கள் கூட கண்டறியப்படவில்லை.
2எலும்புகூடு கடற்கரை (Skeleton Coast)

இது அட்லாண்டிக் கடற்பகுதியில் காணப்படுகிறது. இங்கு செல்லும் கப்பல்கள் பெங்குலா கரண்ட்ல் சிக்க நேரிடும். அதில், ஒருவேளை தப்பித்து கரை ஒதுங்க நீங்கள் நினைத்தால், அந்த கடலில் பாயும் சுறாக்களிடம் தப்ப வேண்டும். அவ்வாறு தப்பிவிட்டாலும், கரை பகுதியில் உள்ள புலி மற்றும் ஹைனாக்களிடம் தப்பிக்க வழி கண்டறிய வேண்டும். எனவேதான் இந்த கடற்கரை மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.
3Cape Tribulation Beach

ஆஸ்திரேலியா நாட்டில் இந்த கடற்கரை காணப்படுகிறது. இது அழகான தோற்றம் கொண்ட கடற்கரையாகும். எனவே இதை பார்க்கும் யாரும் ஆபத்தானது என்று கருத வாய்ப்பில்லை. ஆனால், இந்த கடற்கரை பகுதியில் ஏராளமான முதலைகள் காணப்படுகின்றது. அவை மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்கி தங்களுக்கு உணவாக்கி கொள்கின்றன.
4புதிய ஸ்மிர்னா கடற்கரை (New Smyrna Beach)

புளோரிடா மாகாணத்தில் உள்ள இந்த அழகான கடற்கரைக்குப் பின்னால் மரண ஓலங்கள் ஒலிக்கிறது. ஏனெனில், அந்த கடற்கரையின் அழகை கண்டு ரசித்து கடலில், கால் நனைக்க நினைப்பவர், சுறாவுக்கு உணவாகிவிடுவார்.
5ஃப்ரேசர் தீவு கடற்கரை (Fraser Island)

இந்த கடலும், ஆஸ்திரேலியாவில்தான் உள்ளது. இங்கு கடலுக்கு உள்ளேயும், கரையிலும் ஆபத்து நிறைந்துள்ளது. கடலில் குளிக்க நினைப்பவர்களை ஜெல்லி மீன்கள் விட்டு வைப்பதில்லை. இதில், விஷம் கொண்ட ஜெல்லி மீன்களும் உள்ளன. கரையில், டிங்கோஸ் எனப்படும் நாய் போன்று தோற்றமளிக்கும் விலங்கு காணப்படுகிறது. இது மனிதர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்திவிடும்.
6கன்ஸ்பாய் கடற்கரை (Gansbaai)

இது சுறாக்களின் வீடு என்றே சொல்லலாம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்த கடற்கரையை மையப்படுத்தி, பல ஹாலிவுட் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. நீங்கள் இந்த கடற்கரையின், அழகை ரசிக்க நீண்ட நேரம் நிற்காமல் இருப்பது நல்லது.
7Playa Zipolite Beach

பிளாயா ஜிபோலைட் மெக்ஸிகோவில் உள்ள ஒரே நிர்வாண குளியல் போடும் கடற்கரை. ஆனால், இது மிகவும் ஆபத்தானது. அடிக்கடி சுழல் உருவாகி பலரை கொன்றுள்ளது. இங்கு சென்று குளிக்க ஆசைப்படுவதை விட கடற்கரையில் சூரிய குளியலிட்டு வீடு திரும்புவது சிறந்தது.
8Kilauea Beach

வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள கிலாவியா கடற்கரையும் மெக்சிகோவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் இருக்கும். காரணம், இதன் அருகில் எரிமலை உள்ளது. அது கடந்த 35 வருடங்களாக வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த கடலின் நீர் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே இருக்கும்.
9சவ்பட்டி கடற்கரை (Chowpatty Beach)

இந்தியாவின் மும்பை நகரில் அமைந்துள்ள சவ்வுபட்டி கடற்கரை, நச்சுகள் நிறைந்து காணப்படுகிறது. மும்பை வாழ் மக்கள் இதை விரும்பி சென்று பார்த்தாலும், வெளியூர்களில் இருந்து நீங்கள் செல்லாமல் இருத்தல் சிறந்தது. அவ்வாறு சென்றால், பல விஷவாயுக்களாலும், பூச்சிகளாலும் தாக்கப்படலாம்.
10Amazon River Beaches

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள இந்த கடற்கரையை சாகச வீரர்கள் மிகவும் விரும்புகின்றனர். விஷ மீன்கள், ஒருவகை கடற்பாம்புகள் மற்றும் அனகோண்டாக்கள் அதிகம் காணப்படுகிறது. இவற்றை உங்களை தாக்க நேர்ந்தால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.
உங்களுக்கு சாகசங்கள் செய்வது மிகவும் விரும்பமாக இருந்தால், பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் போது இந்த கடற்கரைகளுக்கு சென்று வரலாம். ஆனால், நீண்டகாலம் வாழ நினைத்தால் நீங்கள் நிச்சயம் செல்லாமல் இருத்தல் சிறந்தது.