மிகக் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய 10 நாடுகள் !!

Date:

வெளிநாட்டு சுற்றுலா நம் எல்லோருக்கும் பிடிக்கும். வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது சில விஷயங்களை அறிந்துகொள்ளுதல் அவசியம். குறிப்பாக நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் விசாவினைப் பெறும் வழிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சில நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இருகரம் கூப்பி வரவேற்கும். விசா என்ற ஒன்றே அந்நாடுகளுக்குத் தேவையில்லை.

விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய 10 நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். அடுத்ததாக அந்நாட்டுடைய பண மதிப்பினைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். சில நாடுகள் நம்மை விட அதிக பண மதிப்பினைக் கொண்டிருக்கும். எ.கா : அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா. ஆனால் நம் நாட்டுப் பணத்தினை விட மதிப்புக் குறைந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டால் எப்படி இருக்கும் ? அப்படிப்பட்ட 10 நாடுகளைப் பற்றி கீழே காணலாம்.

10. ஐஸ்லாந்து (Iceland)

iceland-northern-lights
Credit:planetware.com

வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்திற்கு கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக பயணம் செய்ய முடியும். கடல்வழிப் பயணம் நீண்ட தூரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆகாய மார்க்கமாகவே அந்நாட்டை அடைகின்றனர். இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐஸ்லாந்திற்கு விமானப் போக்குவரத்து உள்ளது. (சென்னை, புது தில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்) ஐஸ்லாந்தின் பணம் க்ரோனா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் 1 ருபாய் என்பது ஐஸ்லாந்தின்  1.87 க்ரோனாக்களுக்குச் சமம்.

ஐஸ்லாந்தில் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இடங்கள் 

  • Eyjafjallajokull – பனிப்பாறைகளால் சூழப்பட்ட எரிமலை மற்றும் அங்குள்ள மிகப்பெரிய பனிக்குகைகள்.
  • புவியின் மேற்பரப்பில் உள்ள எரிமலைக் குழம்புகளின் வெப்பத்தினால் சூடாகும் வெந்நீர் ஊற்றுக்கள்.
  • ஐஸ்லாந்தின் அதிவேக காற்றினால் கரும்பாறைகள் கரைக்கப்பட்டு உருவான கருங்கடற்கரை.
  • ஐஸ்லாந்தில் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வைரக் கடற்கரை.
  • பனிப்பாறைகள் வழியே ஓடும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள்.

9. இலங்கை

Sigiriya-rock-fortress-in-Sri-Lanka
Credit: Travel Triangle

நமது அண்டை நாடான இலங்கைக்கு சென்னையிலிருந்தே நேரிடையாகச் செல்லும் விமானங்கள் உள்ளது. இலங்கையின் பணம் இலங்கை ரூபாய் ஆகும். இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது 2.50 இலங்கை ரூபாய்க்கு சமமாகும்.

இலங்கையில் உள்ள சிறந்த சுற்றுலாத்தலங்கள்

  • 11 – ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரம். அதனைச் சுற்றியுள்ள பூங்காக்கள்.
  • ஐரோப்பியர்களால் கலேவில் கட்டப்பட்ட கோட்டை. அங்குள்ள துறைமுகம் மற்றும் புனித மேரி தேவாலயம். மிகப்பெரிய அருங்காட்சியம் ஒன்றும் இங்குள்ளது. இங்கு Scuba Diving செய்வதற்கு சாகச விரும்பிகள் ஆண்டுதோறும் குவிந்தவண்ணம் உள்ளனர்.
  • ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட காஷ்யபா என்னும் மன்னர் சிகிரியாவில் உள்ள  மலையின் மீது கட்டிய அரண்மனை. UNESCO நிறுவனத்தால் பண்பாட்டுச் சின்னமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இலங்கையின் தென்கோடிப் பகுதியில் அமைந்துள்ள யாலா தேசிய வனம். காடுசார் சுற்றுலாவிற்கு யாலா சிறந்த இடம். வெவ்வேறு வகையான விலங்கினங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

8. ஹங்கேரி (Hungary)

Budapest hungary parliament
Credit: traveltriangle

மத்திய ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது ஹங்கேரி. அந்நாட்டின் பணம் ஹங்கேரி ஃபோரின்ட் ஆகும். இந்தியாவின் ஒரு ருபாய் என்பது 4.10 ஹங்கேரியின் ஃபோரின்ட்களுக்குச் சமம். சென்னையிலிருந்து விமானப் போக்குவரத்தின் மூலம் ஹங்கேரியை அடையலாம்.

ஹங்கேரியின் சிறந்த சுற்றுலாத்தலங்கள் 

  • ஹங்கேரியத் தலைநகரான புதாபெஸ்ட் ஐரோப்பிய நகரங்களிலேயே மிக அழகானதாகும். இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த வீரர்களுக்காகக் கட்டப்பட்ட கோட்டைகள், பழங்கால கட்டிடங்கள் என பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் புதாபெஸ்டில் உள்ளன.
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான Lake Balaton அங்குள்ள படகு சவாரிக்குப் புகழ்பெற்றது. இந்த ஏரி அளவில் மிகப்பெரியது. அதனால் ஹங்கேரியின் கடல் எனவும் இது அழைக்கப்படுகிறது.
  • ஹங்கேரியின் கிருஸ்தவ மதம் பரவியதை பறைசாற்றும் விதமாக ஏராளமான நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ள Eger நகரம் ஹங்கேரியின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
  • ஹங்கேரியின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினைத் தெரிந்துகொள்ள Pecs நகரத்திற்கு தவறாமல் செல்லுங்கள். உலகின் அமைதியான நகரம் என UNESCO இந்த நகரத்தினை அறிவித்துள்ளது.

7. கோஸ்டா ரிக்கா (Costa Rica)

Costa Rica Blog 3 3
Credit: Transat

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்கா பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கோஸ்டா ரிக்கன் கோலன் என்னும் பணம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஒரு ருபாய் 8.55 கோஸ்டா ரிக்கன் கோலனிற்குச் சமம்.

கோஸ்டா ரிக்காவில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள்

  • எரிமலைகளால் சூழப்பட்ட நகரமான லைபீரியா காண்போரை ஈர்க்கும் அழகினைக் கொண்டது. இங்குள்ள கடற்கரையும் அதனை ஒட்டி அமைந்துள்ள தேவாலயமும் புகழ்பெற்றவை.
  • கரீபியன் கடற்கரையில் அமைந்திருக்கும் அடர்காடுகளுக்கு ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் வருகின்றனர்.
  • திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் அதிகள் உலவும் கடற்கரையான Uvita – விற்கு இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாகும்.

6. சிலி (Chile)

chile places to see tamil
Credit: Clarin

தென்னமெரிக்காவில் ஆண்டிஸ் மலைத்தொடருக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய நாடு சிலி. இங்குள்ள பணம் பெசோ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு ரூபாய் சிலியின் 9.79 பெசோக்களுக்குச் சமம்.

சிலியில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள் 

  • சிலியின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது Torres del Paine.  பனியாறுகள் சந்திக்கும் இந்த ஏரியைச் சுற்றி கிரானைட் மலைகள் உள்ளன.
  • ஆண்டிஸ் மலைத் தொடருக்கு அருகினில் அமைந்துள்ள Lauca தேசிய பூங்கா மற்றும் அருகில் உள்ள பனி மலைகள் வசீகரமானவை.
  • கிழக்கே இருக்கும் புராதான தீவு (Eastern Island). இது பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்தத் தீவில் உள்ள வித்தியாசமான சிலைகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

5. மங்கோலியா (Mongolia)

mongolia-CC-By-NC-Ekaterina-Didkovskaya
Credit: obserwatorfinansowy

ஆசியக் கண்டத்தில் சீனா மற்றும் ரஷியாவிற்கு இடையில் மங்கோலியா அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் பணம் துக்ரிக் ஆகும். மங்கோலியாவின் 31.84 துக்ரிக் இந்தியாவின் ஒரு ரூபாய்க்குச் சமம்.

மங்கோலியாவில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள் 

  • மேற்கு மங்கோலியாவில் உள்ள Altai Tavan Bogd தேசிய பூங்கா மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள பனிப் படுகைகள் மிகவும் அழகானவை. 
  • Amarbayasgalant Monastery மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் கோவில் உலகின் பழமையான வழிபாட்டுத்தலங்களுள் ஒன்றாகும்.
  • Gun-Galuut Nature Reserve  20,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள காடு. இங்கு வாழும் பல்வேறு உயிரினங்களை அந்நாட்டு அரசு பெரும்செலவில் பாதுகாத்துவருகிறது.

4. கம்போடியா (Cambodia)

Phnom-Penh-Cambodia-March
Credit: Frontera

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் ரீல் என்ற பணம் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் ஒரு ருபாய் கம்போடியாவின் 60.59 ரீலிற்குச் சமம்.

கம்போடியாவில் உள்ள சிறந்த சுற்றுலாத்தலங்கள் 

  • அங்கோர் என்னும் இடத்தில் உள்ள கோவில். இதனைத் தான் அங்கோர்வாட் கோவில் என்று அழைக்கிறார்கள்.  உலகின் மிகப்பெரிய கோவில் என்ற அந்தஸ்தும் இதற்குண்டு.
  • Koh Ker – கி.பி. 944 – ஆம் ஆண்டிற்கு முன்னர் கேமர் அரசரால் கட்டப்பட்ட புத்த மடாலயம். அடர் காடுகளுக்கு இடையே 98 அடி உயரமுள்ள பிரமிட் போன்ற இந்த வழிபாட்டுத்தலம் காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
  • Phnom Penh – கம்போடியாவின் மிகப்பெரிய நகரம் இதுதான். பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலகட்டத்தில் இந்நகரம் ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்டிருக்கிறது. உலகின் புராதன நகரங்களுக்குள் Phnom Penh – வும் ஒன்று.

3. பராகுவே (Paraguay)

paraguay places to visit
Credit: travelmagma

பராகுவே தென்னமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள நாடாகும். இந்தியாவின் ஒரு ருபாய் பராகுவேயின் பணமான 82.99 குரானுக்குச் சமம்.

பராகுவேயில் உள்ள சிறந்த சுற்றுலாத்தலங்கள் 

  • பராகுவேயின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Iguazú நீர்வீழ்ச்சி. அர்ஜென்டினாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 262 அடி உயரம் கொண்டதாகும்.
  • Eco Reserva Mbatoví சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகும். மலைகளிலிருந்து கயறு மூலம் குதிக்கும் போட்டிகள் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும் மலைக் குன்றுகளுக்கிடையே கயிற்றில் இணைக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்யும் இடமும் இருக்கிறது.
  • பராகுவே நாட்டின் 75% மின்னாற்றலைத் தயாரிக்க உறுதுணையாய் இருக்கும் Itaipú அணை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அணை விளங்குகிறது.

2. இந்தோனேஷியா (Indonesia)

Indonesia-tour-places-to-visit
Credit: Goldentour

இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ளது இந்தோனேஷியா. இந்தோனேஷியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் பெயர் ரூபியா ஆகும். நம் இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு 198.88 இந்தோனேஷியா ரூபியாக்கள் சமம்.

இந்தோனேஷியாவில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள் 

  • கொமோடோ தேசிய பூங்கா – இந்தோனேஷியாவில் மட்டுமே வசிக்கக்கூடிய ஒருவிதமான ராட்சத பல்லி போன்ற உயிரினம் அதிகம் வசிக்கும் தீவு.
  • ஜாவா தீவில் அமைந்துள்ள Yogyakarta நகரம். இந்தோனேஷியாவின் கலை வளர்ச்சிக்கு இந்நகரம் சான்று.
  • இந்தோனேஷியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் பாலி தீவில் உள்ள கிராமங்கள். உலகின் மிக அழகான தீவு என இது அழைக்கப்படுகிறது.

1. வியட்நாம் (Vietnam)

vietnam-golden-bridge-intext
Credit: Travel Triangle

ஆசியக் கண்டத்தில் சீனாவிற்கு அருகே அமைந்துள்ளது வியட்நாம். இங்குள்ள பணம் டாங் என்று வழங்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு ருபாய் என்பது 336.74 வியட்நாம் டாங்கிற்குச் சமம்.

வியட்நாமில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள்

  • தென்சீனக் கடற்கரையில் அமைந்துள்ள நகரமான Hoi An 2000 வருடம் பழமையானது. இங்குள்ள பழங்காலக் கட்டிடங்கள் அனைத்தும் இன்று வரை உறுதியுடன் நிற்கின்றன.
  • Ha Long விரிகுடாவில் அமைந்துள்ள சிறு சிறு தீவுக்கூட்டங்கள். பெரும் நீர்ப்பரப்பிற்கு இடையிடையே எழுந்து நிற்கும் குன்றுகளுக்கு இடையே பயணிக்க படகு சவாரியும் இங்கு பிரபலம்.
  • மலை நகரமான Sapa – விற்குச் செல்லாமல் வியட்நாமிலிருந்து யாரும் தாய்நாடு திரும்புவதில்லை. மலைசூழ் பிரதேசமான இதில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள்.

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!