இயற்கை எழில் கொஞ்சும் அழகும், மலையும் சூழ தேனி மாவட்டம் பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமைப் போர்வை போர்த்தியது போல் மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் குளுமையுடனும் அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்து செல்கின்றனர். பலரையும் கவரும், அதிகம் அறியப்படாத தேனி சுற்றுலா தலங்கள் பல உண்டு. வாருங்கள்… சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் 10 இடங்களை காண்போம்.
மேகமலை

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகிய மலைத்தொடர். இந்த மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலைத்தொடரில் ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளது. வனவிலங்கு சரணாலயமாகவும் மேகமலை விளங்குகிறது.

வனவிலங்குகள் அதிகம் உள்ள பகுதி. இரவு பயணத்திற்கு அங்கு செல்ல அனுமதில்லை. மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் புலி, யானை, கரடி, மான், சிறுத்தை, புள்ளி மான், குரைக்கும் மான், சாம்பார் மான், சுட்டி மான், ராட்சத அணில், இந்திய பறக்கும் நரி, இந்திய ராட்சத அணில், பனை அணில், கவுர் போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன. மேலும், பறவைகள், புள்ளிப் புறா, கருப்பு புல்புல், வெள்ளை வயிறு கொண்ட மரங்கொத்தி, பச்சி இனங்களும் இங்கு வாழ்கின்றன.
குரங்கணி

குரங்கணி மலைப் பயணம் சவாலான மற்றும் மனதை மயக்கும் மலையேற்றங்களில் ஒன்றாகும். சிறிய நீரோடை மிகவும் அழகாகவும் இருக்கிறது. சில நேரங்களில் காட்டுப் பூனைகள், கௌர், நீலகிரி லங்கூர் மற்றும் சிறுத்தைகளைப் பார்க்க முடியும்.
சுருளி அருவி

அருவியில் குளிப்பதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடம். இந்த இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. காட்டிற்குள் இருக்கும் அற்புதமான நீர்வீழ்ச்சி. குடும்பத்துடன் செல்ல பாதுகாப்பான இடம். ஆனால் குரங்குகள் இங்கு அதிகம்.
கும்பக்கரை அருவி

நீர்வீழ்ச்சியின் உயரம் சிறியது. ஆனால் எல்லா வயதினருக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. பெரும்பாலும் குழந்தைகள் மிகவும் ரசித்து விளையாடக்கூடிய இடம்.
டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட் (Top station view point)

தேயிலை தோட்டங்களின் அற்புதமான காட்சி. மரங்கள் மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் நிறைந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
சேரனின் வேடிக்கை பூங்கா

சேரனின் வேடிக்கை பூங்கா குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. அங்கு படகு சவாரி செய்ய ஏற்ற இடம். பூங்காவில் மீன்கள், குழந்தைகள் பூங்கா, படகு சவாரி, சிறிய பறவைகள் மற்றும் விலங்குகள் இங்கு இருக்கின்றது. குடும்பதுடன் மற்றும் நண்பர்களுடன் உல்லாசமாக செல்ல ஏற்ற இடம்.
புலி அருவி

மிக சிறிய நீர்வீழ்ச்சி. பெரியவர்கள், குழந்தைகளை நீர்வீழ்ச்சியை மகிழ்ச்சியாகவும் ரசிக்கமுடியும். அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க முடியும்.
சோத்துப்பாரை அருவி

பள்ளத்தாக்கிற்கு இடையில் கட்டப்பட்ட உயரமான அணை இது. இயற்கையாகவே மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தண்ணீர் உள்ளே நுழைவதால், இது ஒரு புதிய அற்புதமான உணர்வைத் தருகிறது. மழைக்காலங்களில் இந்த அணையைப் பார்வையிட சிறந்த நேரம். அணையின் முழு காட்சியைக் காண மலையின் மேலே செல்லவும். தூப்பாறை அணைக்கட்டுச் சாலையின் இருபுறமும் அடர்ந்த மாமரத்தோட்டங்கள் மிக அழகான தோற்றத்தில் பரவி உள்ளன.
எலிவால் அருவி

தமிழ்நாட்டின் 975 அடி உயரமான அருவியாகும். கொடைக்கானல் மலைப்பகுதியில் தலையார் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. எலிவால் அருவி என்றும், தலையார் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு எந்த வழியும் இல்லை. கம்பீரமான நீர்வீழ்ச்சியைப் பார்க்க பத்தலகுண்டு – கொடைக்கானல் நெடுஞ்சாலையில் மட்டுமே செல்ல முடியும். உயரமான மலைகளின் மூடுபனியில் இது ஒரு வெள்ளைக் கோடாகத் தெரியும்.
Also Read: கோடை விடுமுறையைக் கொண்டாட கர்நாடகாவின் சிறந்த 5 சுற்றுலா தலங்கள்!
மிகக் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய 10 நாடுகள் !!
கன்னியாகுமரி சுற்றுலா: நீங்கள் கண்டுகளிக்க சிறந்த 10 இடங்கள்…!