முக்கடல் சங்கமிக்கும் இடம், உலகின் மிக உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை கடலில் காண்பதற்கு ஏற்ற இடம். கடற்கரை நகரம் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரியில் சுற்றுலா செல்ல சிறந்த 10 இடங்கள்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் உள்ள முக்கிய அடையாளங்களில் ஒன்று திருவள்ளுவர் சிலை. திருவள்ளுவர் சிலை 41 மீட்டர் உயரம் அதாவது 133 அடி. இந்த சிலையின் அருகில் தான் விவேகானந்தர் பாறை உள்ளது. இந்தியாவின் 25 வது உயரமான சிலையாகும். வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் என மூன்று கடலும் சங்கமிக்கும் இடம். 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறை

விவேகானந்தர் பாறை கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள பாறை. சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் வந்தது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று உள்ளது.
வட்டக்கோட்டை

கன்னியாகுமரியில் அமைந்துள்ள வட்டக் கோட்டை (‘வட்ட வடிவத்தில் அமைந்துள்ளதால்’) வட்டக் கோட்டை என பெயர்பெற்றது. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படைவீடுகளுடன் வட்டக்கோட்டை கட்டப்பட்டது. எதிரிகளை வீழ்த்துவதற்காக சுமார் 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. வட்டக்கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வட்டக்கோட்டை பயணிகள் மிகவும் விரும்பும் சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
பத்மநாபபுரம் அரண்மனை

கேரளாவின் கவிதை என வர்ணிக்கப்படும் பத்மநாபபுரம் அரண்மனை. 1601 திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் பத்மநாபபுரம் அரண்மனை கட்டப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அரண்மனை 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அரண்மனையின் முக்கிய பகுதிகளான நுழைவு மண்டபம், அவை மண்டபம், மணிக்கூண்டு, நாடக சாலை, உணவுக் கூடம், தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை, கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம் பாரம்பரிய முறைப்படி அமைந்துள்ளது.
கன்னியாகுமரி கடல்

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம் தான் கன்னியாகுமரி. இது ஒரு சுற்றுலா சார்ந்த இடமாகும். மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஓர் இடமாக இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல், வங்காள விரிக்குடா கடல் ஆகிய மூன்றும் கலக்கும் இடம். இங்கு சித்திரை பௌர்ணமி நாளில் திரிவேணி சங்கமம் கடற்கரைப் பகுதியில், சூரியன் மறையும், சந்திரன் எழும் அரிய காட்சியை, ஒரே சமயத்தில் கண்டு களிக்கலாம். இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே இந்த அற்புத காட்சியைக் காண முடியும்.
தாணுமாலயன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ள தாணுமாலயன் கோயில். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலில் மிகச் சிறந்த கலை நயத்துடன் கூடிய சிறந்த சிற்பங்களும், மண்டபங்களும் வேலைப்பாடுகள் மிக்கவை.
மெழுகு அருங்காட்சியகம்

கன்னியாகுமரியில் மாயாபுரி எனும் இடத்தில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இது இந்தியாவின் முதல் மெழுகு அருங்காட்சியகம் ஆகும். நீங்கள் அருங்காட்சியகத்தில் ஏராளமான சிலைகளை பார்வையிடலாம். பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் என இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய மற்றும் சர்வதேச சின்னங்கள் மெழுகு அருங்காட்சியகத்தின் இடங்களை அலங்கரிக்கின்றன. கன்னியாகுமரி அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதியாக 3-டி ஓவிய மண்டபமும் உள்ளது.
திரிவேணி சங்கம்

திரிவேணி சங்கம் என்பது வங்காள விரிகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் சந்திக்கும் இடம். பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தனித்துவமான கடல் சூரிய உதயம், சூரிய உதயம் மற்றும் நிலவொளி, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கடற்கரையிலிருந்து விவேகானந்த பாறை மற்றும் ஒரு புனித யாத்திரை தலமாக உள்ளது.
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் திற்பரப்பு நீா்வீழ்ச்சி. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. திற்பரப்பு நீா்வீழ்ச்சி பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீா்வீழ்ச்சி சுமார் 300 அடி நீளம் கொண்ட பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையும் உடையது. இந்த அருவியின் உயரம் 50 அடி. வருடத்தில் 7 மாதம் திற்பரப்பு அருவி அதிக அளவு நீருடன் காணப்படும். இந்த நீா்வீழ்ச்சி சுற்று வட்டார வயல்களின் விவசாயத்திற்கு பயன்படுகிறது. நீா் வீழ்ச்சிக்கு அருகில் நீச்சல் குளம் மற்றும் பூங்கா அருகில் உள்ளது. சுற்றுலா செல்வோரின் வசதிக்காக படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால்மிதிப் படகும் உள்ளது.
வியூ டவர்

கடலின் அற்புதக் காட்சிகளை வழங்கும் வியூ டவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி நகரில் அமைந்துள்ளது. தொலைநோக்கி கொண்டு கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள நிலப்பரப்பு, விவேகானந்த பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் பிற நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் பரந்த காட்சியை தொலைநோக்கியின் மூலம் பார்த்து ரசிக்க முடியும்.
Also Read: ஏலகிரி சுற்றுலா: நீங்கள் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்கள்
2021 இல் சுற்றுலா செல்ல தூண்டும் இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்!
இந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்!!