எகனாமிஸ்ட் இன்டலிஜென்ட்ஸ் யூனிட் மேற்கொண்ட உலகில் உள்ள சிறந்த நகரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் 140 நகரங்கள் பங்குபெற்றன. கல்வி, மக்களுக்கான பாதுகாப்பு, போதுமான வேலைவாய்ப்பு, சரியான ஊதியம், கலாச்சாரம், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலகின் முன்னணி நகரங்களான நியூயார்க் 57 வது இடத்தையும், பாரீஸ் 19 வது இடத்தையும், லண்டன் 48 வது இடத்தையும் பிடித்து அதிர்ச்சியளித்திருக்கின்றன.
முதல் நூறு இடங்களில் இந்தியாவின் நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. நம் தலைநகரான டெல்லி 112 ஆம் இடத்தையும், மும்பை 117 ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது. 7 வது இடத்தை இரண்டு நகரங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. அப்படியென்றால் முதல் பத்து இடங்களில் இருக்கும் நகரங்கள் என்னென்ன? கீழே காணலாம்.
1அடிலைட், ஆஸ்திரேலியா

கடந்த ஆண்டும் ஆஸ்திரேலிய நகரங்களின் ஆதிக்கம் பட்டியலில் அதிகமாக இருந்தது. மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் அடிலைட் பெற்றிருக்கும் சதவிகிதம் 96.6% ஆகும்.
2கோபன்ஹேகன், டென்மார்க்

ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை இப்பட்டியலில் இரண்டு நகரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. கோபன்ஹேகனுக்குக் கிடைத்த சதவிகிதம் 96.8%.
3டொராண்டோ, கனடா மற்றும் டோக்கியோ, ஜப்பான்

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவும், கனடாவின் டொராண்டோவும் ஏழாம் இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. ஜப்பானின் காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் இந்த இடத்தைப் பெற்றிருத்தந்திருக்கிறது.
4வான்கூவர், கனடா

டொராண்டோவிற்கு அடுத்தபடியாக கனடாவின் வான்கூவர் நகரம் ஆறாம் இடத்தைத் தட்டிச்சென்றது. மொத்தமாக வான்கூவர் பெற்ற ரேட்டிங் 97.3% ஆகும்.
5சிட்னி, ஆஸ்திரேலியா

அமெரிக்க நகரங்களிலேயே அதிக மக்கட்தொகையினைக் கொண்ட நகரமான சிட்னி 97.4% ரேட்டிங் பெற்று ஐந்தாம் இடத்தில் நிலைபெற்றிருக்கிறது.
6கால்கேரி, கனடா

கனடாவின் பாரம்பரிய மிக்க நகரமான கால்கேரி அதன் தனித்துவமான கலாச்சார அடையாளங்களுக்குப் புகழ்பெற்றது. சென்ற ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த இந்நகரம் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
7ஒசாகா, ஜப்பான்

கடந்த ஆண்டு ஒசாகாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய போக்குவரத்து விதிகளின் காரணமாக ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பெறுகிறது ஜப்பானின் ஒசாகா.
8மெல்போர்ன், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் பல வருடங்களாக டாப் 10 பட்டியலில் இடம்பெறுகிறது. அந்த நகரத்தின் வளர்ச்சி கடந்த ஆண்டை விட 0.7% சதவிகிதம் குறைந்திருப்பதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஏழாண்டுகளாக முதலிடத்தில் இருந்த மெல்போர்ன் இதனால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
9வியன்னா, ஆஸ்திரியா

மக்களின் பாதுகாப்பிற்காக பல திட்டங்களை நடைமுறைபடுத்திய வியன்னா நகரம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. கடந்தமுறை மெல்போர்ன் வைத்திருந்த முதலிடத்தை இம்முறை வியன்னா தட்டித் தூக்கியிருக்கிறது.