ஸ்கை ட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்போர்ட்ஸ் அவார்ட்ஸ் ( Skytrax World Airport Awards) என்பது உலகம் முழுவதிலுமுள்ள விமான நிலையங்களில் சிறந்தவற்றிற்கு கொடுக்கப்படும் விருதாகும். இதனை ஸ்கை ட்ராக்ஸ் (Skytrax) நிறுவனம் நடத்துகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த விமான நிலையங்களுக்கான விருதுகள் லண்டனில் நடைபெற்ற ( Passenger Terminal Expo 2019 விழாவில் வழங்கப்பட்டன. இதில் தொடர்ந்து ஏழாவது முறையாக சிங்கப்பூரின் செங்கி விமான நிலையம் (Changi Airport) முதலிடத்தைப் பிடித்தது.
ஆசிய நாடுகளின் தாக்கம் அதிகம் இருந்தாலும் ஒரு இந்திய விமான நிலையமும் பட்டியலில் இல்லை.

கணக்கெடுப்பு
உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்களின் தரம், சுகாதாரம், பணியாளர்களின் கவனிப்பு, சோதனை நடைமுறைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கேடுப்பானது நடத்தப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே விமான நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டிருகின்றன. பட்டியலில் ஆசிய நாடுகளின் தாக்கம் அதிகம் இருந்தாலும் ஒரு இந்திய விமான நிலையமும் பட்டியலில் இல்லை.

முதல் இடம் பிடித்துள்ள செங்கி விமான நிலையத்தில் பல்வேறு வசதிகள் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. விமான நிலையத்தின் உயரத் தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம், உள் அரங்க நீர்வீழ்ச்சி, ஷாப்பிங் மால், 24 மணி நேரமும் இயங்கும் இரண்டு திரையரங்குகள், உணவகங்கள் என பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது இந்த செங்கி விமான நிலையம்.

TOP10:விமான நிலையங்கள்
- சிங்கப்பூர் செங்கி விமான நிலையம் (Singapore Changi Airport – Singapore)
- டோக்கியோ சர்வதேச விமான நிலையம் (Tokyo International Airport (Haneda) – Tokyo, Japan)
- இன்சியான் சர்வதேச விமான நிலையம் (Incheon International Airport – Seoul, South Korea)
- ஹமாத் சர்வதேச விமான நிலையம் (Hamad International Airport – Doha, Qatar)
- ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் (Hong Kong International Airport – Hong Kong)
- மத்திய ஜப்பான் சர்வதேச விமான நிலையம் (Central Japan International Airport – Bay of Ise, Japan)
- முனிச் விமான நிலையம் (Munich Airport – Munich, Germany)
- லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் (London Heathrow Airport — London, UK)
- நரிட்டா சர்வதேச விமான நிலையம் (Narita International Airport — Tokyo, Japan)
- ஸூரிச் விமான நிலையம் (Zurich Airport — Zurich, Switzerland)