இயற்கையின் படைப்புகளில் வெள்ளை நிற விலங்குகளை பார்ப்பதென்பது மிகவும் அரிதானது. உலகில் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் வெள்ளை மயில் இனம் உள்ளது. இதனால் பல நாடுகளில் இதனை தனி கவனம் எடுத்து இனப்பெருக்கத்தை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவ்வகையான வெள்ளை நிற விலங்குகளைப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்கள். அதன் உண்மையான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அணில்

சிறிது சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த அணில்கள் அமெரிக்காவில் அதிகம் வாழ்கின்றன.
வெள்ளை காகம்

நியூயார்க் மற்றும் ஆப்ரிக்காவில் சில இடங்களிலும் வெள்ளை காகங்கள் வாழ்கின்றன. வெள்ளைக் கழுத்து ரேவன், கார்வஸ் அல்பிகாலிஸ் போன்ற பறவைகளும் பார்ப்பதற்கு இதே தோற்றத்தினைக் கொண்டிருக்கும்.
வெள்ளை கங்காரு

கங்காருக்களின் தாயகம் ஆஸ்திரேலியாதான். ஆனால் டாஸ்மேனியா நாட்டிலும் ஆஸ்திரேலியாவின் யுகலிப்டஸ் காடுகளுக்கு மத்தியிலும் இந்த விசேஷ வெள்ளைக் கங்காரு உயிர்வாழ்கின்றன.
வெள்ளை திமிங்கிலம்

ஆர்டிக் பிரதேசத்தில் மட்டுமே வாழும் இந்தப் பிரத்யேகத் திமிங்கிலம் பெலுகா திமிங்கிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளை முதலை

மொத்தம் இந்த உலகில் 12 மட்டுமே இருக்கும் வெள்ளை முதலைகள் மிக மிக அபூர்வமானவை ஆகும். தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தேசியப் பூங்கா ஒன்றில் மிக வயதான வெள்ளை முதலை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
வெள்ளை மான்

அமெரிக்காவின் ராணுவ மையத்திற்குச் சொந்தமான செனகா என்னும் இடத்தில் இந்த வெள்ளை மான்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலேலே இந்த வகை மான்களை செனகா மான்கள் என்று பலர் அழைக்கிறார்கள்.
வெள்ளைப் புலி

ஆசியாவின் மாங்குரோவ் காடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்தப் புலிகளின் எண்ணிக்கை 100 இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகமெங்கிலும் இருக்கும் புலிகள் 200 தான் என்று அதிர வைக்கிறது இன்னொரு ஆய்வு.
வெள்ளை ஒட்டகம்

கடும்பனி மற்றும் சுட்டெரிக்கும் வெப்பம் ஆகிய இரண்டு வெப்பநிலைகளிலுமே உயிர்வாழத் தகுந்த தகவமைப்புகளைக் கொண்டிருக்கும் ஒட்டகம் பொதுவாக மத்தியக் கிழக்கு நாடுகளில் அதிகம் வாழ்கின்றன.
வெள்ளை சிங்கம்

தென்னாப்பிரிக்காவில் அடர்காடுகளில் இந்த வெள்ளை சிங்கங்கள் அதிகமாய் வாழ்கின்றன. உலகம் எங்கிலும் இருக்கும் பல தேசியப் பூங்காக்களில் இவை வளர்க்கப்படுகின்றன.
வெள்ளை மயில்

இது போன்று விலங்குகளில் வெள்ளை நிறம் தோன்றுவதற்கு காரணம், மெலனின் நிறமி குறைபாடு தான். இது அல்பினிசம் எனப்படுகிறது. தோளில் உள்ள மெலனின் எனப்படும் நிறமி தோன்றுவதற்கான டைரோசினேஸ் செயல் நடைபெறுவதில்லை. இவற்றை பார்ப்பதால் அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் இது ஒரு குறைபாடு. அல்பினிசம் எனப்படும் மரபணு குறைபாட்டு நோய்.