அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான யூ.எஸ்.நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்(U.S.News &World Report) சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. என்ன ஆய்வு என்றா கேட்கிறீர்கள்? உலகில் வாழத் தகுந்த சிறந்த 10 நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வு. 21,000 மக்களிடம் சுமார் 80 நாடுகளைப்பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் அளித்த முடிவுகளின் படி 10 நாடுகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை, குடும்ப அமைப்பு, தனிநபர் வருமானம், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், அரசியல் நிலைத்தன்மை போன்ற 65 தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது. இப்படி அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளை, ஓட்டெடுப்பின் படி வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். அந்நாடுகள் என்னென்ன என்பதைக் கீழே காண்போம்.
10. ஜெர்மனி (Germany)

9. நியுசிலாந்து (New Zealand)

8.நெதர்லாந்து (Netherlands)

7. பின்லாந்து (Finland)

6.ஸ்விட்சர்லாந்து (Switzerland)

5.ஆஸ்திரேலியா (Australia)

4. நார்வே (Norway)

3.சுவீடன் (Sweden)

2.டென்மார்க் (Denmark)

1.கனடா (Canada)
