நாம் அனைவருமே ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்திருப்போம். ஆனால் வெளிநாட்டினர் காப்பீடு செய்வதில்கூட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றனர். கால்கள், மீசை என வித்தியாசமான காப்பீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் வினோதமான 1௦ காப்பீட்டுகளைப் பற்றிக் கீழே காணலாம்.
1.பெயர் : ஹெய்தி க்லம் (Heidi Klum)
காப்பீடு செய்யப்பட்டது : கால்கள்
விலை : 16.21 கோடி.

2.பெயர்: மெர்வ் ஹியுஜஸ் (Merv Hughes)
காப்பீடு செய்யப்பட்டது : மீசை
விலை : 1.91 கோடி

3.பெயர்: ஜெனி சிம்மன்ஸ் (Gene Simmons)
காப்பீடு செய்யப்பட்டது : நாக்கு
விலை : 7.36 கோடி

4.பெயர்: இல்ஜா கோர்ட் (Ilja Gort)
காப்பீடு செய்யப்பட்டது : மூக்கு
விலை :42.64 கோடி

5.பெயர்: கீத் ரிச்சர்ட்ஸ் (Keith Richards)
காப்பீடு செய்யப்பட்டது : நடுவிரல்
விலை : 11.78 கோடி

6.பெயர்: டேவிட் லீ ரோத் (David Lee Roth)
காப்பீடு செய்யப்பட்டது : தன்னுடைய ஆண்மையை காப்பீடு செய்திருக்கிறார்.
விலை : 7.36 கோடி

7.பெயர்: ஷிர்லே மேக்லைன் (Shirley Maclaine)
காப்பீடு செய்யப்பட்டது : ஏலியன்களால் தாக்குதல் ஏற்படும் எனப் பயம் கொண்டதனால் தன்னுடைய சொத்தைக் காப்பீடு செய்துள்ளார்.
விலை : 18.42 லட்சம்

8.பெயர்: கட்டி ஸ்டார்க் (Cutty Stark)
காப்பீடு செய்யப்பட்டது : லோச் நெஸ் (Loch Ness) என்னும் ராட்சதப் பிராணியைக் கண்டுபிடித்தால் பணம் தருவதாக அறிவித்திருந்தார்.
விலை :8.52 கோடி

9.பெயர்: ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (Bruce Springsteen)
காப்பீடு செய்யப்பட்டது : குரல்
விலை : 44.21 கோடி

10.பெயர்: அமெரிக்கா ஃபெர்ரேரா (Amrica Ferrera)
காப்பீடு செய்யப்பட்டது : தன்னுடைய சிரிப்பை காப்பீடு செய்துள்ளார்.
விலை : 73.68 கோடி
