[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்

Date:

உலகம் முழுவதும் ஜூன் புகையிலை எதிர்ப்புதினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த பழக்கம் புழக்கத்தில் இருக்கிறது. இதனைத் தடுக்க பல நாட்டு அரசுகளும் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கின்றன. சரி, சிகரெட் பற்றி உங்களுக்கு தெரிந்திடாத 10 தகவல்களை கீழே காணலாம்.

cigarette-filters
  1. முதன்முதலில் சிகரெட் பிடித்ததற்காக கைதுசெய்யப்பட்ட நபர் ஐரோப்பாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டி ஜெரெஸ் (Rodrigo De Jerez). தனது வீட்டின் பின்புறம் புகைவிட்ட மனிதரை சமூகத்திற்கு தீய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்ததாக காவலதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.
  2. சிகரெட்டால் புற்றுநோய் வரும் என்பதை முதலில் கண்டறிந்தவர்கள் நாஜிக்கள் தான். உலகில் முதன்முறையாக புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டவர் யார் தெரியுமா? ஹிட்லர். ஆமாம் அவரே தான். ஜெர்மனியில் 1930 களில் தொடர்ச்சியாக பல மாநாடுகளை ஹிட்லர் கூட்டியுள்ளார்.
  3. பிலிப் மோரிஸ் என்னும் சிகரட் தயாரிப்பு நிறுவனம் 1970 ஆம் ஆண்டு செக் குடியரசிடம் ஒரு விண்ணப்பம் ஒன்றினை அளித்தது. அதில் அரசாங்கம் சிகரெட் பிடித்தலை ஊக்குவித்தால் மக்கள்தொகை குறையும் இதனால் பல வழிகளில் அரசுக்கு லாபம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிர்வாகிகள் இன்று வரை வாய்ப்பூட்டுச் சட்டத்தினால் தண்டிக்கபட்டு வருகின்றனர்.
  4. அமெரிக்க அதிபர்களில் கிட்டத்தட்ட அனைவருமே “ஊதிய உயர்வு” பெற்றவர்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அமெரிக்க அதிபராக ரிச்சர்ட் நிக்சன் இருந்தபோது புகைப்பிடித்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடத்த ஆணையிட்டார் நிக்சன். ஆனால் நிக்சன் ஒரு நாளைக்கு சராசரியாக 3 பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்ளிய மகான் ஆவார்.
  5. உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 10 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன. அதேபோல் ஒவ்வொரு 8 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் புகைப்பழக்கத்தால் இந்த உலகில் மரணிக்கிறார்.
  6. உங்களுக்கு புகைக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும் புகை சார்ந்த பாதிப்புகள் உங்களுக்கு வரக்கூடும். பொதுவெளியில் மக்கள் புகைப்பதே இதற்குக் காரணம். இப்படி அமெரிக்காவில் 1964 ஆம் ஆண்டிலிருந்து சுமார்  2,500,000 மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  
  7. ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 169 கோடி சிகரெட் பஞ்சுகள் கடலில் தூக்கி வீசப்படுகின்றன. இதனால் கடல்மாசடைய பிளாஸ்டிக் அளவுக்கு முக்கிய காரணியாக சிகரெட் இருக்கிறது.
  8. உலகில் புகைப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சீனர்கள் தான். புகைக்கும் சீனர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அமெரிக்க மக்கட்தொகையை விட அதிகம்.
  9. சிகரெட் தயாரிப்பு துறைக்கும், புகைப்பழக்கம் பற்றிய விழிப்புணர்விற்கும் அதிக பணத்தினை செலவழிக்கும் நாடு அமெரிக்கா தான்.
  10. புகைப்பழக்கத்தை நிறுத்தியவுடன் அதிக நற் கனவுகள் வருமாம். மூளை தகவல்களை தெளிவாக சேமித்துவைக்க தொடங்குவதே இதற்கு காரணம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!