Home அரசியல் & சமூகம் இந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் - உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10 விஷயங்கள்

இந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் – உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10 விஷயங்கள்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank, IPPB) சேவையினைத் துவக்கி வைத்துள்ளார். இந்தத் திட்டமானது தபால் துறையினை நிதிச் சேவைகளின் துறையில் மேலும் மெருகேற்றும். இந்தியாவின் மிகப் பெரிய வங்கிச் சேவையினை இது அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவையானது கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களில் இருந்தும்,  வங்கிச் சேவைகளை வீட்டின் கதவு வரை வந்து அளிக்க உள்ளது. இதற்காகத் தபால் டெலிவரி ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளனர்.

இந்தியா போஸ்ட் வங்கி சேவையானது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தபால் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனம், இந்திய அரசின் 100 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. ஐபிபிபி 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பேமென்ட்ஸ் சேவைகளை நாட்டின் 1.55 லட்சம் தபால் அலுவலகக் கிளைகளுடன் இணைத்து, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஐபிபிபி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள 10 முக்கியமான விஷயங்கள்:

1. ஐபிபிபி, Airtel Money மற்றும் Paytm ஆகியவற்றின் பின்னர், வங்கி மூலம் பணம் செலுத்தும் அனுமதி பெற்ற மூன்றாவது நிறுவனம் ஆகும்.

2. தனிநபர்களிடமிருந்தும் சிறிய வியாபாரிகளிடமிருந்தும், ஒரு சேமிப்புக் கணக்குக்கு ரூபாய் 1 லட்சம் வரை வைப்புத் தொகையை இந்த வங்கிகள் ஏற்கும்..

3. ஐபிபிபி நாடு முழுவதும் 650 கிளைகளுடன் மட்டுமன்றி துணை தபால் நிலையங்களில் 3,250 அணுகல் மையங்களுடன் இயங்கும். அது போக கிராமப்புறங்களில் 11,000 கிராம சேவை மையங்கள் மூலமும், மற்றும் நகர்ப்புறங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் மூலமும் சேவை வழங்கப்படும்..

4. சேவை வழங்குவதற்காக இந்த வங்கியுடன், நாட்டில் மொத்தம் 1.55 லட்சம் தபால் அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

5. ஐபிபிபி, பிற வங்கிகளைப் போலவே சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள், பணம் பரிமாற்றம், கட்டணங்களைச் செலுத்துதல், வணிகக் கணக்குகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன. ஆனால், இந்த வங்கியில் கடனோ, கிரெடிட் கார்டு கார்டோ பெற முடியாது

6. ஐபிபிபி கணக்குடன், 17 கோடி அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகள் இணைக்கப் பட உள்ளன. இது RTGS, NEFT, IMPS பரிவர்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான ஒப்புதல் பெற்றது, இது ஐபிபிபி வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் பணத்தை மாற்றவும் பெறவும் உதவும்.

7. ஐபிபிபி, இணைய வங்கிச் சேவையை எளிதாக்கும் ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தொலைபேசிக் கட்டணம் , டி.டி.எச், எரிவாயு இணைப்புக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றை செலுத்திக் கொள்ளலாம்.

8.ஐபிபிபி கணக்கில். 1 லட்சம் வைப்புத்தொகையை வைத்திருப்பதால் அஞ்சலகக் கணக்கு அதில் அவர்களுக்கு இணைக்கப்படும், வாடிக்கையாளர்கள் இரு கணக்குகளுக்கும் தொகையை மாற்றிக் கொள்ள இயலும். ஒரு லட்சத்திற்கு மேல் வைக்கப்படும் சேமிப்புத் தொகை அஞ்சலாகக் கணக்கில் வைக்கப்படும்.

9. வாடிக்கையாளர்கள் கனக்குத் தொடங்கிய முதல் நாள் முதலே மின்சாரக்கட்டணம் போன்றவற்றை செலுத்த அனுமதிக்கப் படுவார்கள்.

10. வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபிபிபி கணக்கை மொபைல் பயன்பாட்டின் மூலம் அணுகலாம், ஒரு வாடிக்கையாளர் KYC (உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்) தேவையை நிறைவு செய்தவுடன், வங்கி அனைத்து வங்கி சேவையையும் வழங்கும்.

கடன் கொடுக்கும் கூகுள் – இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -