ஸ்கை ட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் அவார்ட்ஸ் (Skytrax World Airline Awards 2018) என்னும் விருது ஆண்டுதோறும் சுத்தமான விமானங்களுக்கு அளிக்கப்படுகிறது. பயணிகளிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. சீட், விரிப்புகள், உணவு, கழிப்பிடம் ஆகியவற்றின் சுத்தம் குறித்து பயணிகள் வழங்கும் மதிப்பெண்களின் படி சுத்தமான விமானங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஜப்பான், கனடா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் விமானங்கள் முன்னிலை வகிக்கின்றன.
சுத்தம்
விடுமுறைகளை அழகாக்குவதில் பயணங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதிக மக்களால் விரும்பப்படும் விமான சேவைகளில் சுத்தம் என்பது மிகப்பெரிய வர்த்தகத்தினை கொண்டது. உண்மைதான். ஒவ்வொரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான சுகாதார பணியாளர்களின் வேலை சவால் வாய்ந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Travelmath.com இணையதளம் நுண்ணுயிரியல் ஆய்வுக்குழு ஒன்றினைக்கொண்டு ஐந்து விமான நிலையங்களில் ஆய்வு நடத்தியது. மொத்தம் விமானத்தின் 26 இடங்களில் தரவுகள் எடுக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் பயணிகளின் முன்புறம் இருக்கும் ட்ரே டேபிள் தான் விமானத்திலேயே அசுத்தமான பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.

அதாவது அந்த ட்ரே டேபிளின் ஒரு சதுர அங்குலத்தில் சுமார் 2,155 நுண்கிருமிகள் இருந்தன என்கிறது ஆய்வு முடிவு.
விருது
சுத்தமான விமானங்களுக்கு ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகளை வழங்கிவருகிறது. விமான போக்குவரத்து துறையில் மிகுந்த மதிப்புவாய்ந்த விருதாக இது பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறையின் ஆஸ்கார் அளவிற்கு விமானத்துறையில் புகழ் வாய்ந்தது இந்த விருது.
பட்டியல்