கால்பந்தைத் தொடர்ந்து உலகில் அதிகமானோரால் விரும்பப்படும் விளையாட்டான கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் யாருக்குமே தெரிந்திராத பல தகவல்கள் கிரிக்கெட் வீரர்கள் பற்றி இருக்கின்றன. அவற்றை தான் நாம் இனி தினமும் பார்க்க இருக்கிறோம்.

உலககோப்பை திருவிழா துவங்க இருக்கிறது. ஆகவே கிரிக்கெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நமது எழுத்தானியில் தொடர்ந்து அளிக்க உள்ளோம். சரி, டாப் 10 சுவாரஸ்ய தகவல்களை கீழே பார்க்கலாம்.
- 1964 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் பாபு நாட்கார்னி தொடர்ந்து 21 ஓவர்களை மெய்டனாக வீசியிருக்கிறார். இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
2. 1987 ஆம் ஆண்டு பிராபர்னி மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக மாற்று ஆட்டக்காரராக களமிறங்கினார் சச்சின். சப்ஸ்டிட்யுட் வீரராக களமிறங்கிய சச்சின் பீல்டிங் மட்டும் செய்தார்.
3. ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் தொடர்ந்து 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
4. டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் சத்தீஷ்வர் புஜாரா, எம்.எல்.ஜெயசிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி.
5. கொலை குற்றத்திற்காக தூக்குதண்டனை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் மேற்கு இந்திய தீவுகளின் லெஸ்லி ஹெல்டன். ஜமைக்காவைச் சேர்ந்த லெஸ்லி கொன்றது அவர் மனைவியை!!
6. இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை இங்கிலாந்திற்கு எதிராக விளையாடியது. ஆண்டு 1974. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டி 55 ஓவர்களாக நடந்தது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
7. முதல்தர கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் வில்பிரெட் ரோட்ஸ் தான். இங்கிலாந்தைச் சேர்ந்த ரோட்ஸ் 4204 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது 52 வது வரையிலும் ரோட்ஸ் கிரிக்கெட் விளையாடினார் என்பது கொசுறு தகவல்.
8. முதல்தர போட்டிகளில் அதிக சதங்களை எடுத்த வீரர் இங்கிலாந்தின் சர் ஜாக் ஹோப்ஸ் ஆவார். அவர் 199 சதங்களை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.
9. உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சதமடித்த ஒரே வீரர் மஹேலா ஜெயவர்த்தனே மட்டும்தான். ஞாபமிருக்கிறதா 2011 ஆம் ஆண்டு உலககோப்பை.
10. கென்யாவின் ஆசிப் கரீம் அந்த நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரே வீரர் இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரு நாட்டிற்காக ஆடியது கரீம் மட்டுமே.
உசைன் போல்ட் வாழ்க்கை வரலாறு: ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த வெற்றி வீரனின் கதை!