28.5 C
Chennai
Sunday, April 14, 2024
Homeபத்தே 10வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்! 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்...

வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்! 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்…

NeoTamil on Google News

பூமியில் வாழும் விசித்திர உயிரினங்களில் வௌவாலும் ஒன்று. வௌவால்களால் ஒரு சில போர்களே நின்றதாக வரலாறுகளும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி தற்காலத்தில் வௌவால்கள் உணவு சங்கிலியில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து வருகின்றன. வௌவால்களில் பல கொடூரமான வைரஸ்கள் இருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2016 ம் ஆண்டு கேரளாவை தாக்கிய நிபா வைரஸ் ஒரு வகை பழந்திண்ணி வௌவால்கள் மூலம் தான் பரவியது. அதற்கு காரணம் பனம்பழம் தின்னும் வௌவால்கள் எனவும் கண்டறியப்பட்டது.

2020 ம் ஆண்டில் எறும்புதின்னிகளிலிருந்து வௌவால்கள் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவியதாகவும் சில ஆராய்ச்சிகள் கூறின. அப்படிப்பட்ட வைரஸ்களின் பிறப்பிடமான வௌவால்களைப் பற்றி நமக்கு தெரிந்திராத 10 தகவல்களை இங்கே பற்றி காண்போம்.

1
சுமார் 1400 வகையான வௌவால் இனங்கள் உலகில் உள்ளன..

Credits: San diago Animals and Plants Zoo

ஆம், பனிப்பிரதேசங்கள் முதல் வறண்ட பாலைவனங்கள் வரை உலகின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான வௌவால்கள் வாழ்கின்றன. உருவ அமைப்பில், நாணயம் அளவில் துவங்கி இறக்கையை விரித்தால் சுமார் 6 அடி வரையிலான வௌவால்கள் என அதிலும் பல வேறுபாட்டுடன் உள்ளன.

2
வேட்டை வௌவால்கள்

பல வௌவால் இனங்கள் ஆந்தை, கழுகு மற்றும் பாம்பு ஆகியவற்றால் உண்ணப்படுகின்றன. ஆனால் அதில் ஒரு சில வௌவால் இனங்கள் வேட்டையாடும் திறன் படைத்தவை. குறிப்பாக ஹைபெர்னேட் வகை வௌவால்கள் வேட்டையாட கூடியவை. ஆனால், அவற்றை வெள்ளை பூஞ்சை எனும் நோய் குறிப்பாக மூக்கின் நுனியில் தாக்குவதால் அழிவுறும் தருவாயில் இருக்கின்றன.

3
பழங்களின் வாழ்வாதாரம் வௌவால்

Credits: Stemcellsgroup.com

கிட்டத்தட்ட 300 வகையான பழங்கள் தங்களது மகரந்த சேர்க்கைக்கு வௌவால்களை நம்பியே இருக்கின்றன. அத்தி, வாழைப்பழம் போன்ற பழங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

4
உலகின் ஒரே பறக்கும் பாலூட்டிகள்

பாலூட்டி வகையை சேர்ந்த ஒருசில வகைகள் பறக்க கூடியவையாக இருந்தாலும், அவற்றால் சில அடி உயரங்கள் மட்டுமே பறக்க முடியும். முழுமையாக பறக்க கூடிய வௌவால்கள் மட்டுமே உலகின் பாலூட்டி வகையை சேர்ந்த பறவை ஆகும். அதிகபட்சமாக 6 அடிநீள இறக்கைகள் கொண்ட வௌவால்கள் உலகில் இருக்கின்றன.

5
மிகவும் சிறிய.. ஆனால் அதிவேகமானவை

Credits: elifecinces.com

வௌவால்கள் சிறிய வகையாக இருந்தாலும், அதிவேகமாக இலக்கை துரத்திப் பிடிக்கக்கூடியவை. இறைகள் இவற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வௌவால்களுக்கு உணவாகின்றன. அதிகபட்சமாக மணிக்கு 100 மைல்கள் வேகத்திற்கு வௌவால்கள் பறக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவைகள் அதிவேகமாக எந்த தடையிலும் இடித்துக்கொள்ளாமல் பறப்பதை ஆராய்ச்சி செய்து எதிரொலி (Echolocation) மூலம் Radar (ரேடார்) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

6
குகையில் மட்டுமே வாழுமா?

அவ்வாறு அல்ல. சில வௌவால் இனங்கள் இடம் பெயரக்கூடியவை. வெப்பகாலங்களில் உணவை தேடி வெவ்வேறு இடங்களுக்கு செல்லக்கூடியவை. இதற்கு “ஸ்பாட் வௌவால்” என்ற பெயரும் உண்டு. தொடர்ந்து பனிப்பிரதேசங்களில் மட்டுமே வாழும் வௌவால் இனங்களுக்கு “ஹைபெர்னேட் வௌவால்” எனப் பெயருண்டு.

7
41 வயதுடைய வௌவால்

பொதுவாக, ஆராய்ச்சியில் சிறிய உயிரினங்களுக்கு வாழ்நாள் மிகவும் குறைவு என்கிற தத்துவம் உண்டு. ஆனால் அவை வௌவால் இனத்திற்கு பொருந்தாது. பல வௌவால் இனங்கள் 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்நாள் கொண்டவை. ஆனால், ஆராய்ச்சியில் குறிப்பிட்ட 6 வகையான வௌவால் இனங்கள் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான நாட்கள் வாழக்கூடியவை என தெரியவந்துள்ளது.

மேலும், 2006ஆம் ஆண்டு சைபீரியா பகுதயில் வாழ்ந்த வௌவால் ஒன்று 41 ஆண்டுகள் உயிருடன் இருந்திருக்கிறது. இதுவே உலகில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த வௌவாலாக சாதனை படைத்துள்ளது.

8
தன்னைத்தானே சுத்தம் செய்யும்

Credits:dio.gov

வௌவால்கள் பல அசுத்தமான பகுதிகளுக்குள் சென்று வந்தாலும், பூனைகளைப் போலவே வௌவாலும் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் படைத்தவை. தங்களது உடலை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டு வழவழப்பாக வைத்துக்கொள்ளும். குரங்குகள் போல ஒன்றை சுத்தம் செய்ய மற்றொன்று உதவும் குணமும் கொண்டவை.

9
வௌவால் ஏற்படுத்திய மருத்துவ அதிசயங்கள்

வௌவால்களுக்கு ஆதாரமாக இருக்கும் செடிகளின் மூலம் இதுவரை 80 க்கும் மேலான மருந்துகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. மேலும், வௌவால்களுக்கு கண்கள் இருந்தாலும் எதிரொலிகளை பயன்படுத்தியே பயணிக்கின்றன. எதிரொலி தத்துவம் பார்வையற்றோருக்கு தற்போது வரை பயன்பட்டுவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

10
வௌவால் குட்டிகள்

நாய்களை போலவே வௌவாலும் குட்டிகளுடன் பிணைப்பாக வாழக்கூடியவை. சிறிய வௌவால்கள் “பப்ஸ்” என்றும், வளர்ந்த பிறகு “காலனிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. குட்டிகளுக்கு தாய் வௌவால் பாலுட்டுகின்றன. குட்டிகள் பூச்சிகளை சிறிது காலத்திற்கு உண்ணாது. மனிதர்களைப் போல வெறும் பால் மட்டுமே.

Did you know?
நிபா, ஹென்றா, எபோலா, மார்பர்க், சார்ஸ் ஆகிய 5 வைரஸ்கள் கடந்த 50 ஆண்டுகளில் வௌவால்கள் மூலமாக மட்டுமே மனிதர்களுக்கு பரவியிருக்கின்றன. கொரோனா வைரஸும் வௌவால்கள் மூலமாகவே பரவியதாகவும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மனிதர்களுக்கு ஆபத்தாக விளங்கும் இந்த வைரஸ்கள் வௌவால்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் வைரஸ்களின் பிறப்பிடமாக பல வௌவால் இனங்கள் இருந்தாலும் இவை சுற்றுச்சூழல் மற்றும் உயிரி சமநிலைக்கு மிகவும் முக்கியம்!

தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!

வைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

- Advertisment -

Must Read

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

0
கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய முன் கால்கள், பெரிய பாதங்கள், குறுகிய ரோமங்கள் கூர்மையான நகங்களைக் கொண்டுள்ளன. கங்காருக்கள் மேக்ரோபஸ் என்ற விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தவை....
error: Content is DMCA copyright protected!