வாட்ஸ் ஆப் – ல் புதிய அறிமுகம் – குரூப் வீடியோ கால்!!!

0
151

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரிடம் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்ஆப் (WhatsApp) அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் தகவல் பரிமாற உதவும் செயலிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ள வாட்ஸ்ஆப்பை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் (Face Book ) நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறது.

அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்த முகநூல் நிறுவனத்தின் F8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எப்படி குரூப் வீடியோ / ஆடியோ கால் செய்வது ?
  • நீங்கள் எப்போதும் போல ஒருவருக்கு, வாட்ஸ் ஆப் மூலம்  வீடியோ/ ஆடியோ கால் செய்யவும்.
  • பிறகு, வலதுபுறம் உள்ள “add participant” என்பதை தெரிவு செய்து, உங்களது கைபேசியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள எண்களை அழைப்பில் இணைத்து கொள்ளலாம்.
  • வீடியோ/ஆடியோ அழைப்புகளை அதிகபட்சம் நான்கு பேருடன் மட்டுமே மேற்கொள்ள முடியும்.க்ரூப் ஆடியோ கால் செய்யும் போது அதனை வீடியோ காலாக மாற்ற முடியாது.

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி சேவையைப் போன்றே இந்த வீடியோ/ ஆடியோ சேவையும் முழுவதும் பாதுகாப்பானது (ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது) என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.