இன்றும் இந்தியாவின் 43 ஆயிரம் கிராமங்களில் கைபேசி வசதி கிடையாது..!!

0
60
Caption : Daily Mail

இந்தியா முழுவதும் தொலைத்தொடர்பு வசதியில் மிகவும் முன்னேறிவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி இன்று வரை சென்று சேரவில்லை. இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.  அனைத்து மக்களும் இந்த கைபேசிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

43 ஆயிரம் கிராமங்கள்

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளை இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சேவைகளைப் பயன்படுத்த சரியான நெட்வொர்க் வசதி வேண்டும். ஆனால், இந்தியாவில் 43 ஆயிரம் கிராமங்களில் சரியான இணைய சேவை இல்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது.

 

Credit : IND

டிஜிட்டல் இந்தியா

பிரதமர் மோடி அவர்கள் தனது கனவுத் திட்டமான, டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டத்தைத் தொடங்கி வைத்து வெகு காலம் ஆகிறது. அந்த சமயம் அவர் தெரிவித்தது என்னவென்றால், இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், 120 கோடி இந்தியர்களும் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு புதுமை படைப்பார்கள் என்றார்.

நெட்வொர்க் வசதி

சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் நடந்த விவாதத்தில், இந்தியா முழுவதும் எத்தனை கிராமங்களுக்கு கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி சென்று சேரவில்லை என்றும், கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது என்றும்  கேள்வி எழுப்பப்பட்டது.

 

Credit : Techno.com

 

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, இந்தியா முழுவதும் ஏறத்தாழ 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை. இந்த கிராமங்கள் பெரும்பாலும் நக்சலைட்கள் இருக்கும் மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. இந்த மாநிலங்களின் நலனுக்காக 7,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் எத்தனை கிராமங்கள் ?
இந்தியா முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இதில், 83 கிராமங்களில் இதுவரை செல்போன் சேவை வழங்கப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கை. 

மேலும், நக்சலைட்களின் போராட்டங்கள் அதிகமுள்ள மாநிலங்களாகக் கருதப்படும்  ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா,பீஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், செல்போன் சேவை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாகத் தான் இருக்கிறது என்று அமைச்சர் மனோஜ் சின்ஹாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

 

ஒடிஷா

இதில் ஒடிஷா-வில் இருக்கும்,  47 ஆயிரம்  கிராமங்களில் ஏறத்தாழ 10 ஆயிரம் கிராமங்களில் செல்போன் சேவை முற்றிலும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சண்டிகர், புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் செல்போன் சேவை மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கேரளாவில் மட்டும் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளது.