வெளியான உடன் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 5 ப்ரோ மொபைல் மீண்டும் விற்பனைக்கு…

0
55

சியோமி (Xiaomi) நிறுவனம் அறிமுகப்படுத்திய சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (Redmi note 5 pro) இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சியோமி அறிவித்த  முதல்கட்ட விற்பனையில் அனைத்து ரெட்மி நோட் 5 ப்ரோ-களும் விற்று தீர்ந்து விட்டது .

ரெட்மி நோட் 5 ப்ரோ கிடைப்பதென்பது மிகக் கடினம் என்ற நிலை,  வெளியான சில மணி நேரத்திலேயே உருவானது. அனைத்து இருப்புகளையும் விற்றுத் தீர்த்து விட்ட சியோமி நிறுவனம் தற்போது மறுபடியும் விற்பனையைத் தனது இணையதளம் (mi.com) மூலம் துவங்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை

இன்று  முதல் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ-வின் விற்பனை mi.com இல் துவங்குகிறது. இன்றைய விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் புதிய பிரத்தியேக ரெட் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமி வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரெட் வேரியண்ட் இன் டீஸர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெட் வேரியண்ட் ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ரெட் வேரியண்ட், முதன் முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது சியோமி நிறுவனம் இன்று முதல் இந்திய சந்தையிலும் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ரெட் வேரியண்டை  விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

 

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விபரக்குறிப்பு:

– 5.99 இன்ச் முழு எச்டி 2160 x 1080 பிக்சல் கொண்ட தொடுதிரை

– குயல்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் ப்ராசஸர்
– 4ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
– 6ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
– சேமிப்பு விரிவாக்கம் 128ஜிபி வரை
– 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் டூயல் கேமரா
– 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ MIUI 9.5
– 4000 என்ஏஎச் பேட்டரி

 

 

இந்த அசத்தலான  சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கருப்பு, நீளம், கோல்ட் மற்றும் ரெட் நிறத்தில் இன்று  முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. உங்கள் புதிய  ரெட்மி கைபேசியை வாங்க mi.com அல்லது மி ஸ்டோர்-க்கு உடனே செல்லுங்கள்.