கடந்த சில ஆண்டுகளில் உலகில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உபயோகிக்கின்றனர்.
இதன் காரணமாக, தற்போது பெரும்பாலான மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதால் பல்வேறு உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, குறுஞ்செய்திகள் அனுப்பத் தட்டச்சு செய்து கொண்டே இருப்பதால் விரல்களுக்கும், அதிக நேரம் கைபேசியைப் பார்ப்பதால் கண்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு தற்போது ‘வாட்ஸப்பிட்டீஸ்’ (WhatsAppitis) என்று பெயர் வைத்துள்ளனர்.

செல்போன் தீமைகள்
சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்காக, ஸ்மார்ட்போன்களை இடைவிடாமல் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, கார்பல் டன்னல் நோய்க்குறி (carpal tunnel syndrome) ஆகும். இது அதிகமாக தட்டச்சு செய்வதன் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும், தட்டச்சு செய்யும் போது விரல் தசைகளில் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் கை எலும்புகள் மற்றும் மூட்டுகளில் மோசமான வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி நீண்ட நேரம் முன்னோக்கித் தலையை சாய்த்துக் கொண்டிருப்பதால் கழுத்துத் தசைகள் மற்றும் தசைநார்கள் ஆகியவைகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இளைஞர்களுக்கு முதுகெலும்பு, இளவயதிலேயே முதிர்ச்சியின் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறது என்றும் இது மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் ஆகாஷ் ஹெல்த்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் (Aakash Healthcare Super Speciality Hospital) எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி கூறியுள்ளார்.

அதே போல் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கழுத்து வலியும், முதுகு வலியும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இந்த பிரச்சனை செல்போன் உபயோகப்படுத்துவதற்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நோய் என்றும், நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்கள் உபயோகிப்பதன் விளைவாகவே இந்த நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நீண்ட காலப் பயன்பாடுக்குக் காரணமான எலும்புகள் பலவீனமடைகின்றது.
கழுத்துவலி என்பது ஸ்மார்ட்போன் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான நோயாக தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, இளைஞர்களுக்கு தசை வலி, தோள் வலி, கழுத்து வலி மற்றும் சில சமயம் பின்பக்க வலி என்று ஏற்படுகிறது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நீண்ட காலப் பயன்பாடுக்குக் காரணமான எலும்புகள் பலவீனமடைகின்றது. நரம்பு கோளாறு, கழுத்து வலி உள்பட பல நோய்கள் வரும் என்கிறார் டாக்டர் ஐஸ்வர் போரா.
வாழும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. நாம் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரங்களை நாமே முறைப்படுத்துதல் ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். பொழுதுபோக்கும் அம்சங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து விடக் கூடாது அல்லவா?