பிரபல சமூக வலைதள செயலியான வாட்ஸ்அப் தனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதனால் வாட்ஸ்அப் உபயோகிக்கும் பல கோடி பயனாளர்களின் தகவல் பரிமாற்றத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

உலகமெங்கும் பெரும்பான்மையான மக்கள் வாட்ஸ்அப் உபயோகிக்கத் துவங்கியதுமே சமூக வலைதள ஜாம்பவானான பேஸ்புக் 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து இதனை வாங்கிவிட்டது. தற்போது மற்றப்பட்டிருக்கும் இந்தப் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் சில பாதுகாப்பு குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து உங்களுடைய தகவல்களை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றிக் கீழே காணலாம்.
Last Seen
கடைசியாக நீங்கள் ஆன்லைனில் இருந்த நேரத்தைக் காண்பிக்க இந்த வசதி ஏற்கனவே தரப்பட்டுள்ளது. தற்போது உங்களுடைய Last Seen மற்ற அனைவருக்கும் தெரியும் வண்ணம் இருக்கும். உங்களுடைய இயங்கு நேரம் குறித்து மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க Last Seen – ஐ Nobody – ல் வைத்துக்கொள்ளுங்கள்.
Profile Photo
வாட்ஸ்அப் கணக்கைத் துவங்கும்போதே உங்களுடையே புகைப்படத்தை அதில் வைப்பதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய புகைப்படமானது உங்களுக்குத் தெரியாதவர்களால் தரவிறக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இதனால் உள்ளது. எனவே சொந்த புகைப்படங்களை வைத்துக்கொள்ள வேண்டாம்.

Message Previews
உங்களுக்கு வரும் செய்திகளின் ஒரு பகுதி Notification Bar லேயே தெரியும். சில நேரங்களில் காணொளி கூட உங்களுடைய முன்னனுமதியின்றி ஓடத் துவங்கிவிடும். இதனைத் தவிர்க்க Notification settings – ல் இருக்கும் Show Preview ஐ Off செய்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு யாரிடமிருந்து செய்தி வந்திருக்கிறது என்பது மட்டுமே தெரியும். செய்தி வெளியில் காட்டப்படமாட்டது.
Whats App Status
புகைப்படங்கள், வீடியோ, மற்றும் உங்களுடைய எழுத்துக்களை ஸ்டேட்டசாக நீங்கள் வைத்திருக்கலாம். 24 மணி நேரம் அத்தகவல்கள் அழியாமல் இருக்கும். உங்களுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அவை தெரியுமாறு வைத்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் சில சமயங்களில் தேவையில்லாத நபர்களின் அலைபேசி எண்ணும் உங்களது போனில் இருக்கலாம். அவர்களுக்கு உங்களுடைய தகவல்களைத் தெரியாமல் பார்த்துகொள்ளுங்கள்.
Read Receipts
உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை நீங்கள் திறந்தவுடன் அந்தத் தகவல் அனுப்பியவருக்கு தெரிவிக்கப்படும். இவற்றால் பெரிய ஆபத்து இல்லை எனிலும் அதனைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் வல்லுனர்கள்.