ஒரு காலத்தில் செல்போன் என்றாலே நோக்கியா தான். வேறெந்த பெயரும் நம் நினைவுக்கே வந்ததில்லை. ஆண்ட்ராய்ட் போன்களின் அறிமுகம் நோக்கியாவின் இடத்தைக் காலி செய்து விட்டது. நோக்கியா நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சந்தையில் போட்டி போடத் துவங்கியுள்ளது. விண்டோஸ் போன்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நோக்கியா, ஆண்டிராய்ட் தொழில்நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது முதல் அந்த நிறுவனத்தின் பழைய ரசிகர்கள் மீண்டும் நோக்கியா பக்கம் படையெடுத்து வருகிறார்கள். சமீப காலமாகவே ஆண்டிராய்ட் போன்களை வெளியிட்டு வரும் நோக்கியா, தற்போது தனது புதிய நோக்கியா 8.1 – ஐ இந்த மாதம் 28 – ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

நோக்கியா 8.1
நோக்கியாவின் இந்த போன் Xiaomi Foco F1 (20,999) மற்றும் Honor Play (19,999) ஆகியவற்றுடன் போட்டி போடும் வகையில் அமைந்துள்ளது. நோக்கியா 8.1 – ன் விலை 23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விலையைப் பொறுத்த வரை அந்த இரண்டு மாடல்களை விடவும் இது அதிகம் தான் எனினும் நோக்கியாவின் தரம் காரணமாக இந்த புதிய நோக்கியா 8.1 பெரும் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஆண்ட்ராய்ட் 9.0 பை (Pie) இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. 8.18 அங்குல முகப்புத்திரையில் 2.5D Curved Glass பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 20 மெகா பிக்சலுடனும் பின்பக்கத்தில் 12 மற்றும் 13 மெகாபிக்சல் கொண்ட இரட்டைக் கேமரா உள்ளது. ஆக்டா பிராசஸரில் இயங்கும் இந்த போன் 64 ஜி.பி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 3500 mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த போனில் 4 ஜி.பி. ரேம் இருக்கிறது.

நோக்கியாவின் இந்த புதிய மாடலினை வாங்க வாடிக்கையாளர்களிடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமா ? இந்த நோக்கியா 8.1 என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.