15 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வேலை செய்யும் – மோட்டோரோலாவின் அசத்தும் புதிய கைபேசி

0
41

மோட்டோ ஒன் பவர் (Motorola One Power)  ஸ்மார்ட்போன் கூகிளின் ஆண்ட்ராய்டு ஒன் (Android One) திட்டத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனைக் கடந்த மாதம் உலகளவில் IFA 2018 நிகழ்வில் அறிமுகம் செய்தது பிரபல கைபேசி நிறுவனமான மோட்டோரோலா.

மோட்டோ ஒன் பவர் கைபேசியில் 19:9 விகிதாச்சார அளவில் தொடுதிரையின் மேல் நோட்ச் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஒன் சாதனம் ஆகும்.

மோட்டோ ஒன் பவர்-இல்  5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் டர்போ பவர் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த கைபேசியை  15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மட்டும் போதும் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் – சிறப்பம்சங்கள்

 •  6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
 •  1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
 • அட்ரினோ 509 GPU
 • 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
 • 32 ஜிபி, 64 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்

 • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
 • 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
 • 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
 • 12 எம்.பி. செல்ஃபி கேமரா
 • கைரேகை சென்சார்
 • P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
 •  4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 5000 Mah . பேட்டரி
 • டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது.

மோட்டோரோலா ஒன் பவர் விலை மற்றும் ஆபர்

மோட்டோரோலா ஒன் பவர் விலை Rs 15,999 ரூபாயாகநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைபேசி அக்டோபர் 5 – ஆம் தேதி முதல் பிளிப்கார்டில் (Flipkart) விற்பனைக்கு கிடைக்கும். மற்றும் இந்தக்  கைபேசிக்கான முன்பதிவு இன்றிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.