28.5 C
Chennai
Wednesday, July 6, 2022
Homeதொழில்நுட்பம்செல்போன்இந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் இதுதான்

இந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் இதுதான்

NeoTamil on Google News

முன்னொரு காலத்தில் செல்போன் என்றால் நோக்கியா மட்டும்தான் இருக்கும். மோட்டரோலா என்பதெல்லாம் ஏதோ ஏலியன் சமாச்சாரம் என்று எண்ணியவர்கள் இருந்த நம் நாடுதான் தற்போது உலகின் அதிக ஆப் உபயோகிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நானெல்லாம் அந்தக்காலத்துல என்று பெருமை பேசிக்கொண்டிருந்த ஜாவா போன்களுக்கு மங்களம் பாட வந்தது ஆண்ட்ராய்ட். ரேம், இன்டெர்னல் மெமரி, புராசசர், மெகா பிக்சல் போன்ற வார்த்தைகளும் புழக்கத்திற்கு வந்தன. கூடவே அப்ளிகேஷன் எனப்படும் ஆப்ஸ்களும். கூகுள் ப்ளே ஸ்டோர் பக்கமாய் போனால், புடவை எடுக்கப்போன பெண்களின் நிலைமைதான். எதை டவுன்லோட் செய்வது, எதை விடுவது எனத்தெரியாமல் எல்லாவற்றையும் ஒரே இறக்காக இறக்கி விடுவோம். போனுக்கு குடிவந்த ஆப்ஸ் அனைத்தும் பேட்டரிக்கு ஆப்படித்துவிடும்.

whatsapp fb messengar
Credit: Blogs In a Blog

இதே நிலைமைதான் ஐபோன் வாசிகளுக்கும். தற்போதைய நிலையில் கூகுள் ப்ளே மற்றும் ஐ ஸ்டோரில் உள்ள ஆப்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். விஞ்ஞானம் வளர, ஒரே நேரத்தில் பல தீர்வுகளை நம்மால் காண முடியவேண்டும். உதாரணமாக கைக்கடிகாரம், டார்ச்லைட், கால்குலேட்டர், திசை காட்டும் கருவி ஆகிவற்றை தனித்தனியாக தூக்கிக்கொண்டு திரிந்த நாம் இப்போது ஒரே போனைக்கொண்டு எல்லா பொருட்களின் சோலியையும் முடித்துவிட்டோம்.

how-to-download-whatsapp
Credit: BT. com

குழந்தை வளர்ப்பில் துவங்கி, நன்னெறிக்கதைகள், பாடப் புத்தகங்கள், வேலைவாய்ப்பு, மேட்ரிமோனியல் என சகலத்திற்கும் ஆப்கள் வந்துவிட்டன. இவற்றில் அதிகமானோர் எந்த ஆப்ஸை உபயோகிக்கிறார்கள் என்ற ஆய்வு தான் சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பல ஆச்சர்யகரமான தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உலகம் முழுவதும் கடந்த 2018-ல் மட்டும் 205.4 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 258.2 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மட்டும் 2017-ல் 12.1 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 37.2 பில்லியனாக இருக்கலாம். உலகளவில் சீனாவில்தான் அதிகளவில் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. 2017-ல் மட்டும் 79.3 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்துள்ளனர். உலகளவில் அதிக ஆப்ஸ் தரவிறக்கம் செய்வதில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப்தான். உலகம் முழுவதும் 75.81 மில்லியன் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளது. இதை 50.3 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து, ஃபேஸ்புக் லைட்டை 27.7 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். இளைஞர்களின் புனித இடமான டிக்டாக்கை உலகம் முழுவதும் 26.17 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல், கேம்களில் ஸ்டேக் பால் (Stack ball – blast through platforms), ரன் ரேஸ் 3D (run race 3D), கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena free fire ), கலர் பம்ப் 3D (color bump 3D), ட்விஸ்ட் ஹிட் (Twist hit), ஹோம்ஸ்கேப்ஸ் (Homescapes) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 ஆண்ட்ராய்டு ஆப்ஸ் பட்டியலில் உள்ளன.

iPhone-XR-Worst-Features1
Credit: Apple

அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஐஓஎஸ் ஆப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது க்ளீன் ரோடு (Clean Road) கேம்தான். இதை 11.18 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரன் ரேஸ் 3D (run race 3D)-யை 9.75 மில்லியன் பேரும், அமேஸ் (Amaze) ஆப்ஸை 9.73 மில்லியன் பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரோலர் ஸ்ப்லாட் (Roller Splat), வாட்ஸ்அப் (Whatsapp), ஸ்டேக் பால் 3D (Stack ball 3D), மிஸ்டர். புல்லட் – ஸ்பை புதிர்கள் (Mr.Bullet – Spy Puzzles), டைல்ஸ் ஹப் – EDM ரஷ் (Tiles Hop – EDM Rush), மெசஞ்சர் (messenger), ஃபேஸ்புக் (Facebook) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

இன்னொரு விபரமும் தெரியவந்திருக்கிறது. அதாவது இந்தியர்கள் அனைவரும் இலவச ஆப்களை மட்டுமே உபயோகிக்க விருப்பப்படுவதாகவும், பணம் கட்டும் ஆப்களை புறக்கணிப்பதாகவும் நம் பெருமையை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது புள்ளி விவர புயல்.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is DMCA copyright protected!