பட்ஜெட் விலையில் கிடைக்கும் கைபேசிகளின் பட்டியல்

0
108

தீபாவளி என்றாலே புதிதாக எதாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் தான் இருக்கிறது. 15000 ரூபாய்க்குள் ஸ்மார்ட் போன்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான பதிவு இது..

இந்த கைபேசிகள் உங்களின் தேவையை உங்களின் பட்ஜெட்டில் பூர்த்தி செய்யும். ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இணைய தளங்கள் நிறைய தள்ளுபடிகளில் கைப்பேசிகளை விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி Mi A2 – விலை : ரூ. 14,999 (Xiaomi Mi A2)

அடுத்த இரண்டு வருடங்களுக்கு வர இருக்கும் ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் அனைத்தையும் பெற விரும்பினால் இந்த கைபேசி சரியான தேர்வாக இருக்கும். ஓரியோ இயங்கு தளத்துடன் வெளிவந்துள்ளது இந்த கைபேசி. 12 எம்.பி மற்றும் 20 எம்.பி செயல் திறன் கொண்டிருக்கும் இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கிறது. 4 ஜிபி RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டஇந்த கைபேசியைத் தற்போது 15000 ரூபாய்க்குள் வாங்கலாம்.

budget phonesரியல்மீ 2 ப்ரோ – விலை ரூ. 13,990 (Realme 2 Pro)

6.3 அங்குல அளவுள்ள இந்தக் கைபேசியில் இருக்கும் இரட்டைக் கேமரா வசதிகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை எடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 16 MP மற்றும் 2MP செயல் திறன் கொண்ட கேமராக்கள் நல்ல வெளிச்சமான (right lighting condition) சூழலில் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற ஒன்றாகும்.

குவால்கோம் 660 ப்ராசசர் மூலம் செயல்படும் இந்த கைபேசி இயங்குதளம் 5.2-வில் வேலை செய்கிறது. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டஇந்த கைபேசியைத் தற்போது ரூ. 13,990க்கு வாங்கலாம்.

budget phonesநோக்கியா 6.1 ப்ளஸ் : விலை ரூ. 15,999 (Nokia 6.1 Plus)

5.8 அங்குல முழு  எச்.டி திரையுடன் வர இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெசல்யூசன் 2280×1080 பிக்சல்கள் ஆகும். குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ரோசசருடன் வரும் இந்த கைபேசியில் ஆட்ரெனோ 509 கிராபிக்ஸ் ப்ராசசர் யூனிட்டும் இருக்கிறது. 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜுடன் வரும் இந்த கைபேசி ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும்.

3060mAh திறன் கொண்ட உள்ளடக்க பேட்டரியைக் கொண்டுள்ளது. 16MP + 5MP என இரட்டைப் பின்பக்க கேமராக்களையும் 16 MP செல்பி கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த கைபேசி. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த கைபேசியைத் தற்போது ரூ. 15,990க்கு வாங்கலாம்.

budget phonesசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ – விலை : ரூ. 12, 999 ( Xiaomi Redmi Note 5 Pro )

குவால்கோம் 636 ப்ரோசசர் மூலம் இயங்கும் இந்த கைபேசியின் அளவு 5.99 இன்ச் ஆகும். முழு  ஹெச்.டி திரையைக்  கொண்டிருக்கிறது. 4000 mAh பேட்டரி திறன் கொண்டிருக்கிற இந்த போனில் 12MP+5MP திறன் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள் இருக்கின்றன. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்தக் கைபேசியைத் தற்போது ரூ. 12,999க்கு வாங்கலாம்.

budget phones