Home தொழில்நுட்பம் செல்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தலான LG - Q 7 கைபேசிகள் அறிமுகம்!!

இந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தலான LG – Q 7 கைபேசிகள் அறிமுகம்!!

இந்தியாவில் எல்ஜி க்யூ6 (LG Q6) மாடல் கைபேசிகளின் வெற்றியைத் தொடர்ந்து, அந்நிறுவனம் எல்ஜி க்யூ7 (LG Q7) என்ற ஸ்மார்ட்போன் மாடலைத் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மாடல் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் அம்சத்தைக் கொண்டு வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், டி.டி.எஸ், எக்ஸ் 3டி சரவுண்ட், Portrait mode, QLens, போன்ற சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளி வந்துள்ளது.

ஃபுல் விஷன் டிஸ்ப்ளே

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போன், ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவைக் (Full Vision Display) கொண்டுள்ளது.  5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் ரெஸல்யூசன் அடிப்படையில் வெளி வந்துள்ளது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டதாக கைபேசி  உடல் பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 ஜிபி ரேம்

இக்கருவியில்  3 ஜிபி ரேம் (RAM ) மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி (Internal Memory) இடம் பெற்றுள்ளது. அத்துடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 

ஜிகா ஹெர்ட்ஸ்

க்யூ7 ஸ்மார்ட்போனில் பொதுவாக குவால்காம் (Qualcomm), 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். கருப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்தக் கைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.

 

கேமரா

க்யூ7 பின்புற கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாக உள்ளது. மேலும், முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டுள்ளது.  எல்இடி பிளாஷ் வசதியும்  கொடுக்கப்பட்டுள்ளது.  வைஃபை ப்ளூடூத் 4.2 , யுஎஸ்பி-2.0, போன்ற இணைப்பு வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ளன.

விலை

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் (mAh) பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 ஆகும்.

 

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -